ரூ.2 லட்சம் வெட்டு… இல்லைனா வீடு கட்ட முடியாது… பணம் கேட்டு முதியவரை தாக்கிய திமுக பிரமுகர்கள்!!

Author: Babu Lakshmanan
3 May 2024, 6:04 pm

சென்னையில் பணம் கேட்டு அடுக்குமாடி குடியிருப்பை கட்டிக் கொண்டிருந்த முதியவரை திமுக பிரமுகர்கள் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மடிப்பாக்கம் ராம்நகர் தெற்கு 11வது பிரதான சாலையில் ஆந்திராவை சேர்ந்த மண்ணு ரமணய்யா (74) என்பவர் அடுக்குமாடி குடியிருப்பை கட்டி வருகிறார். 14 வீடுகள் கொண்ட இந்த பிரமாண்ட குடியிருப்பை கடந்த 2020ம் ஆண்டில் இருந்து கட்டி வருகிறார்.

மேலும் படிக்க: KFC சிக்கனில் ஸ்டீல் கம்பி… நெழிந்த புழு… குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ; பெற்றோர் பரபரப்பு புகார்..!!!

கட்டுமானப் பணிகள் முடியும் தருவாயில் உள்ள நிலையில், 188வது வார்டு திமுக கவுன்சிலர் சமீனா செல்வம் என்பவரின் ஆதரவாளர்கள் ரூ.2 லட்சம் பணம் கேட்டு மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இருமுறை மிரட்டிச் சென்ற நிலையில், நேற்று வந்து பணம் கேட்டு மிரட்டி முதியவரை கன்னத்தில் தாக்கியுள்ளனர்.

ஏற்கெனவே இருதய அறுவை சிகிச்சை மேற்கொண்ட முதியவர், திமுக பிரமுகர்கள் தாக்கியதில் நிலைகுலைந்து போகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனையடுத்து மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் முதியவர் அளித்துள்ள புகாரின் பேரில் திமுக பிரமுகர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 291

    0

    0