ராமதாஸ் குறித்து அவதூறு… கொலை மிரட்டல் விடுத்த திமுக பிரமுகர் ; பாமகவினர் பரபரப்பு புகார்..!!!

Author: Babu Lakshmanan
13 May 2024, 7:26 pm

பெரம்பலூரில் இரு சமூகத்தினர் இடையே கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய திமுக ஒன்றிய செயலாளர் மதியழகன் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம், பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.

பெரம்பலூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் அதன் மாவட்ட செயலாளர் செந்தில்குமார் தலைமையில், கட்சி நிர்வாகிகளுடன் மாவட்ட காவல் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து புகார் மனு அளித்தனர்.

மேலும் படிக்க: தாய்ப்பாலை குடித்துவிட்டு விஷப்பாலை ஊட்ட நினைப்பதா..? மிகப்பெரிய பாவச்செயல்… அமைச்சருக்கு எச்சரிக்கை!

அதனைத் தொடர்ந்து அவர்கள் தெரிவிக்கையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் மதியழகன் பொது இடங்களில் தங்கள் சமூக மக்களிடையே ஜாதி கலவரத்தை ஏற்படுத்தும் வகையிலும், குறிப்பிட்ட வன்னியர் சமூகத்தை மட்டும் இழிவாக பேசியும், கொலை மிரட்டல் விடுக்கும் பாணியில் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி வந்தது.

மேலும், பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கத்தின் நிறுவன மருத்துவர் இராமதாஸ் அவர்களை அவமரியாதையாகவும், தன் சமூகமான பட்டியல் சமூகத்தில் தனக்கு நல்ல பெயர் வர வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு வன்னியர் சமூகத்தின் நற்பெயருக்கு கேடு விளைவிக்கும் நோக்கத்தில் போலியான அவதூறு கருத்துக்களை பேசி உள்ளதோடு, இரு சமூக மக்களிடையே பகையுணர்வை ஏற்படுத்தி ஜாதி கலவரத்தை ஏற்படுத்தி சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார்.

எனவே, திமுக நிர்வாகி மதியழகன் மீது தகுந்த சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனு அளித்திருக்கிறோம். மனு மீது நடவடிக்கை இல்லை என்றால், மிகப்பெரிய அளவில் போராட்டத்தை நடத்த உள்ளோம், என தெரிவித்தனர்.

  • producer lose his money because of suriya film எல்லாமே போச்சு- சூர்யா வைத்து படம் எடுத்ததால் நடுத்தெருவுக்கு வந்த தயாரிப்பாளர்?