கரூர் பாராளுமன்ற தொகுதி மக்களுக்கு தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே திமுகவினர் வீடு, வீடாக சென்று பரிசு பொருட்கள் விநியோகம் செய்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், தேசிய மற்றும் மாநில கட்சிகள் தேர்தல் தொடர்பாக பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழகத்தில் குறிப்பாக கரூர் பாராளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் மினி கனரக ஆட்டோவில் வைத்து வீடு, வீடாக சென்று பரிசு பொருட்கள் விநியோகம் செய்யும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
குறிப்பாக “இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்” என்ற தலைப்பில் தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை குறித்தும், திமுக ஆட்சியில் செய்யப்பட்ட சிறப்பு திட்டங்கள் குறித்த துண்டறிக்கையுடன் அட்டைப்பெட்டியில் வைத்து மூன்று சில்வர் சம்படங்கள் வீடு, வீடாக விநியோகித்து வருகின்றனர்.
கரூர் பாராளுமன்ற தொகுதி திமுக, காங்கிரஸ் என யாருக்கு ஒதுக்கப்படும் என்று கூட்டணிக்குள்ளையே குழப்பம் நீடித்து வரும் நிலையில், திமுகவினர் இரவு நேரத்தில் வீடு வீடாக சென்று பரிசு பொருட்கள் விநியோகம் செய்து வருவதால், கரூர் தொகுதி திமுகவுக்குதான் ஒதுக்கப்படலாம் என்று பொதுமக்கள் பரவலாக பேசி வருகின்றனர்.
தேசிய விருதுகளை குவித்த திரைப்படம்… வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் 2011 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “ஆடுகளம்”. மிகவும்…
வெளியானது குட் பேட் அக்லி… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று உலகம்…
வேலூர் மாவட்டம் லத்தேரி அருகே உள்ள பட்டியூர் பகுதியில் இருக்கும் சென்னை டு பெங்களூர் ரயில்வே தண்டவாளத்தின் அருகே உள்ள…
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் இன்று காலை 11 மணியளவில் பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் செய்தியாளர்கள்…
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா வரதனூர் பஞ்சாயத்து செங்கோட்டை பாளையம் கிராமத்தில் இயங்கி வரும் சுவாமி சிப்பவாணந்த மெட்ரிகுலேஷன் பள்ளி…
ஜெயிலர் 2 படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் கோவை வந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இதையும் படியுங்க: விஜய் பட…
This website uses cookies.