‘எங்களுக்கு வாழைத்தார் தான் முக்கியம்’… CM ஸ்டாலின் கார் செல்வதற்கு முன்பே… செய்வதறியாமல் திகைத்த போலீஸார்..!!

Author: Babu Lakshmanan
11 March 2024, 2:44 pm

முதலமைச்சர் கார் செல்வதற்கு முன்பே முதல்வரை வரவேற்பதற்காக வைக்கப்பட்டிருந்த வாழை தார்கள், கரும்பு, இளநீர்,தேங்காய்களை தூக்கி செல்ல முயன்ற பொதுமக்களால் பரபரப்பு நிலவியது.

தருமபுரி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேலம், தருமபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் முடிவுற்ற பணிகளை துவக்கி வைத்தும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இதில் அவரை வரவேற்க கல்லூரி முகப்பு வாயிலில் வாழை மர தோரணங்கள், இளநீர் தேங்காய் தோரணங்கள், கரும்பு தோரணங்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டிருந்தன.

இந்நிலையில், இந்நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டு முடிவுற்ற பணிகளை துவக்கி வைத்தும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.


நிகழ்ச்சி முடிந்து முதல்வர் ஸ்டாலின் வெளியில் வரும் வழியில் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, முதல்வரை வரவேற்பதற்காக வைக்கப்பட்டிருந்த இளநீர் மற்றும் வாழைத்தார்களை பொதுமக்கள் தூக்கி சென்றனர்‌.

அப்போது, இதனைப் பார்த்து அங்கிருந்த திமுக நிர்வாகி மற்றும் அரூர் காவல் ஆய்வாளர் ஆகியோர் முதல்வர் சென்றபின், நீங்கள் பறித்து கொண்டு செல்லுங்கள் என அறிவுரை வழங்கியதை கேட்காத பொதுமக்கள், மீண்டும் அதை பறித்த போது, திமுக நிர்வாகி தடியை எடுத்து அவர்களை துரத்த முயன்றார்.

இதனை பார்த்த காவல்துறையினர் முதல்வர் செல்லும் போது ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டு விடுமோ என எண்ணி வரவேற்பு தோரணங்களுக்கு பாதுகாப்பு அளித்திருந்தனர்.

அதை தொடர்ந்து, நிகழ்ச்சி முடிந்து முதல்வரின் கார் முகப்பு வாயிலை கடந்து சென்ற மறுக்கணமே கையிலிருந்த கத்தி, ஆக்ஷாபிளேடு உள்ளிட்டவைகளை கொண்டு வாழைத்தார்கள், கரும்பு மற்றும் இளநீர் தேங்காய்களை பறித்து கொண்டு பாகுபலி படத்தில் ஆற்றைக் கடக்கும் போது குழந்தை பாகுபலி சிவகாமி பெற்ற கையில் தூக்கிச் செல்வது போன்று பறித்த பொருட்களை தூக்கி சென்றனர்.

சில இளைஞர்கள் முகப்பு வாயிலின்மேல் இருந்த இளநீர் காய்களை, ஆபத்தையும் உணராமல் மேலே ஏறி பறித்து வெளுத்து வாங்கும் கோடை வெயிலுக்கு அதை உடைத்து பருகி விட்டு சென்றனர்.

  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…