‘வாங்கிக்கோங்க யாராவது’… சுட்ட தோசையை வாங்க ஆள் இல்லாததால் தடுமாறிய திமுக வேட்பாளர் ; கடைசியாக சிக்கிய சிறுவன்!!

Author: Babu Lakshmanan
1 April 2024, 1:05 pm

வாழப்பாடி அருகே உணவகத்தில் தோசை சுட்டு யாரிடம் கொடுப்பது என தெரியாமல் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற திமுக வேட்பாளர் தவித்தார்.

தமிழகத்தில் வருகின்ற 19ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பல்வேறு யுத்திகளில் பிரச்சாரம் செய்து வேட்பாளர்கள் பொதுமக்களை கவர்ந்து வருகின்றனர்

அந்த வகையில், சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் கள்ளக்குறிச்சி தொகுதி திமுக வேட்பாளர் மலையரசன் வாக்கு சேகரிப்பில் கட்சித் தொண்டர்களுடன் ஈடுபட்டார்.

அப்போது, பொழுது சாலையோரம் உள்ள உணவகத்தில் தோசை சுட்டார். அப்பொழுது, தோசை சுட்டதை யாரிடம் கொடுப்பது என தெரியாமல், நீ வாங்கி கொள் என மாறி மாறி பேசி யாரும் வாங்காத தோசையை, அவ்வழியாக சாலையில் சென்ற சிறுவனை அழைத்து சிறுவனிடம் ஒருவழியாக தோசை ஒப்படைத்தார் திமுக வேட்பாளர். இந்த நிகழ்ச்சி அங்கிருந்த கட்சி நிர்வாகிகளிடையே புன்னகை ஏற்படுத்தியது.

https://player.vimeo.com/video/929448260?badge=0&autopause=0&player_id=0&app_id=58479

தற்போது திமுகவினர் பேஸ்புக் வலைதளத்தில் இந்த வீடியோ பதிவேற்றம் செய்து நகப்பை ஏற்படுத்தி வைரலாகி வருகிறது.

  • again ajith join with adhik ravichandran in ak 64AK 64- திரும்பவும் ஆதிக் ரவிச்சந்திரனோடயா? குட் பேட் அக்லி படத்தில் இடம்பெற்ற Hint!