எங்களை மீறி அதிகாரிகளால் செயல்பட முடியுமா…? தேனி திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் பேச்சால் பரபரப்பு
Author: Babu Lakshmanan9 April 2024, 7:07 pm
நாங்கள் ஆளுங்கட்சி எங்களை மீறி அதிகாரிகள் செயல்பட முடியுமா…? என்று மதுரை வாடிப்பட்டியில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்ட தேனி தொகுதி திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.
மதுரை வாடிப்பட்டியில் தேனி நாடாளுமன்ற திமுக வேட்பாளர் தங்கத்தமிழ் செல்வன் மூன்றாவது நாளாக தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார். இதில் வாடிப்பட்டியின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து வாக்குகள் சேகரித்தார்.
மேலும் படிக்க: மதுபானக் கொள்கை முறைகேட்டில் கெஜ்ரிவாலுக்கு முக்கிய பங்கு… CM என்பதால் சலுகை அளிக்க முடியாது ; டெல்லி உயர்நீதிமன்றம்
வாடிப்பட்டி போடிநாயக்கன்பட்டி பகுதியில் அவர் பேசியதாவது :- எனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தால் மத்தியில் இண்டியா கூட்டணி ஆட்சி பொறுப்பேற்றவுடன் ஒரு குடும்பத்திற்கு 8 லட்சம் ரூபாய் ஐந்து ஆண்டுகளில் கிடைக்கும். மாநில அரசு 3 லட்ச ரூபாயும், மத்திய அரசு மூலம் 5 லட்சம் ரூபாயும், மொத்தம் 8 லட்ச ரூபாய் ஒரு குடும்பத்திற்கு கிடைக்கும்.
மேலும், போடிநாயக்கன்பட்டி மந்தையில் நானும், எம்எல்ஏ, சேர்மன் ஆகியோர் அமர்ந்து கொண்டு மக்களிடம் மனுக்களை பெற்று அதிகாரிகளை நாங்கள் இருக்கும் இடத்திற்கு வரச் செய்து மக்களுக்கு திட்டங்களை நிறைவேற்றி வைப்போம்.
மேலும் படிக்க: அந்த விஷயத்தில் பிரதமருக்கு கடுகளவு கூட பொருத்தம் இல்லாதவர் உதயநிதி ; பொன்.ராதாகிருஷ்ணன் கடும் விமர்சனம்..!!
மாநிலத்திலும் எங்கள் ஆட்சி, மத்தியிலும் எங்கள் ஆட்சி இருக்கும் போது, எங்களை மீறி அதிகாரிகள் செயல்பட முடியுமா..? என்று பேசினார்.