டாஸ்மாக் செல்லும் வழிக்கு ரூ.30 லட்சத்தில் புதிய சாலையா..? சர்ச்சையில் சிக்கிய திமுக நகர்மன்ற தலைவர்… முறைகேடு என புகார்..!!

Author: Babu Lakshmanan
13 January 2024, 12:52 pm

டாஸ்மாக் மட்டும் இயங்கும் சாலைக்கு குடிமகன்கன் வசதிக்காக 30 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய தார் சாலை அமைப்பதாக திமுகவைச் சேர்ந்த சேர்மன் குண்டாமணி (எ) செல்வராஜ் மீது புகார் எழுந்துள்ளது.

மயிலாடுதுறை நகரில் சமீபத்தில் பெய்த வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு சாலைகள் மிகவும் பழுதடைந்து காணப்படுகின்றது. தங்கள் பகுதிக்கு சாலை வேண்டுமென்று நகராட்சி கூட்டத்தில் நகராட்சி உறுப்பினர்கள், காது கிழிய கத்தியும், எதற்கும் பணம் இல்லை என்பதே நகர்மன்ற தலைவரான திமுகவைச் சேர்ந்த குண்டாமணி (எ) செல்வராஜ் என்பவரின் பதிலாக இருந்து வருகிறது.

ஆனால், மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகே பஜனை மட சந்து என்கிற, இடத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் செல்லும் பாதையை புதிதாக தார் சாலையாக போடுவதற்கு 30 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள சம்பவம் மயிலாடுதுறை மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பேருந்து நிலையத்தின் ஒருபுறத்திலிருந்து இந்த பஜனைமட சந்து வழியாக பெரிய கடை வீதி செல்லலாம். ஆனால் ஏற்கனவே குடிமகன்கள் வசதிக்காக சாலையை தகரத்தை வைத்து பேருந்துநிலையத்திற்கு வரும், முக்கிய சாலையை திமுகவினர் அடைத்து அப்பகுதியில் பார் வைத்து நடத்தி வந்தனர்.

இந்நிலையில், மழைக்காலத்தில் தினம்தோறும், மதுபான கடைக்கு வந்து செல்லும் ஆயிரக்கணக்கான குடிமகன்கள் வசதிக்காக, புதிய தார் சாலை அமைக்க நகர்மன்ற தலைவர் குண்டாமணி (எ) செல்வராஜ் முடிவு செய்து, அதற்காக மயிலாடுதுறையைச் சேர்ந்த ரங்கராஜ் என்கிற தொழிலதிபர் உதவியுடன், நமக்கு நாமே திட்டத்தில் தொழிலதிபர் ரங்கராஜை 15 லட்ச ரூபாய் பணம் கட்ட வைத்து, நகராட்சியிலிருந்து, ரு 15 லட்சம் பணம் பெற்று புதிய சாலை அமைக்கப்படுகிறது.

நெடுஞ்சாலைத்துறை பகுதியில் சாலை அமைக்க ஆயிரத்து 500 ரூபாய் மீட்டர் நீளத்திற்கே ரூ. 34 லட்ச ரூபாய் மட்டுமே, ஒதுக்கீடு செய்யப்படும் நிலையில், அதில், 10ல் ஒரு மடங்குக்கு, குறைவாக உள்ள சாலைக்கு ரூ.30 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது மயிலாடுதுறை பகுதி பொதுமக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதில் பெருமளவு முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், மயிலாடுதுறை நகர்மன்ற தலைவர் செல்வராஜ் என்பவரின் மருமகன் சந்தோஷ் என்பவர் சாலை போடும் ஒப்பந்தக்காரர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

சமீபத்தில் தமிழக அரசின் மக்களைத் தேடி முதல்வர் என்ற திட்டத்திற்காக நகராட்சியில் நடைபெற்ற முகாம்களுக்கு செலவாக ரூ.15 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ததாக செய்தி வெளியான நிலையில், தொடர்ந்து நகர்மன்ற தலைவர் குண்டாமணி என்கிற செல்வராஜின் மருமகன் சாலை போட வேண்டும் என்பதற்காக, 30 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதில் பெரும் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும் இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் மயிலாடுதுறை பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி