‘தரமா கட்டனும்-னா நீ டெண்டர் எடுக்க வேண்டியது தானே..?’ மதிமுக கவுன்சிலரை ஒருமையில் திட்டிய திமுக சேர்மன்..!!

Author: Babu Lakshmanan
30 December 2023, 5:04 pm

மயிலாடுதுறை புதிய பேருந்து நிலையம் கட்டுவதில் ஊழல் நடந்திருப்பதாகவும், 24 கோடிக்கு டெண்டர் விட்டு விட்டு 15 கோடிக்கு மட்டுமே வேலை நடக்கிறது என நகராட்சி கூட்டத்தில் திமுக சேர்மனுக்கு எதிராக திமுக கவுன்சிலர்கள் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

மயிலாடுதுறை நகராட்சியில் மாதாந்திர கூட்டம் திமுக நகர்மன்ற தலைவர் குண்டாமணி என்கிற செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. நகரத்தின் பல்வேறு திட்டங்கள் குறித்து கவுன்சிலர்கள் காரசாரமாக விவாதித்தனர், திமுக கூட்டணி கட்சியான மதிமுகவை சேர்ந்த மார்க்கெட் கணேசன் என்பவர் பேசும்போது, மயிலாடுதுறை புதிய பேருந்து நிலையம் கட்டுமான பணிகளுக்கு 24 கோடிக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. ஆனால் 15 கோடிக்கு மட்டுமே வேலை நடந்து கொண்டிருக்கிறது.

பாதாள சாக்கடை திட்டத்தை மறுசீரமைப்பு செய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளது. ஆனால், இதற்கு தரமான கம்பெனியை வைத்து செய்ய வேண்டும், என்று குற்றம் சாட்டி பேசினார்.

இதற்கு பதில் அளித்த நகர்மன்ற தலைவர், “தரமாக செய்ய வேண்டுமென்றால் நீயே டெண்டர் எடுக்க வேண்டியதுதானே,” என்று ஒருமையில் பதில் அளித்தார். அதற்கு பதில் அளித்த மதிமுக கவுன்சிலர் என்னுடைய தகுதிக்கு சைக்கிள் ஸ்டாண்ட் வேண்டுமென்றால் டெண்டர் எடுக்கலாம், உன்னை போல் இரண்டு கோடிக்கு நான் வேலை செய்வது கிடையாது என்று காரசாரமாக பதிலளித்தார்.

மேலும், நகராட்சியில் புதிய நகர் அமைப்பதில் சுமார் பல லட்சம் ரூபாய் பணம் கைமாறி உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருவதாக வார்டு கவுன்சிலர்கள் பரபரப்பு குற்றச்சாட்டு வைத்தனர். தொடர்ந்து. இதனால் கூச்சல் குழப்பம் நிலவியது.

இந்நிலையில் பாதாள சாக்கடை காரணமாக நகரில் பல்வேறு இடங்களில் சாக்கடை நீர் வழிந்து ஓடுவதாக திமுகவைச் சேர்ந்த ரஜினி என்ற நகர்மன்ற உறுப்பினர் குற்றம் சாட்டிய நிலையில், இதற்கு பதிலளித்த நகராட்சி ஆணையர், ‘நீங்கள் அடிக்கடி சிங்கப்பூர் சென்று வருகிறீர்கள். அதனால் சுகாதாரம் பற்றி பேசுகிறீர்கள். நம்ம ஊரைப்பற்றி பாருங்கள்’, என்று நக்கலாக பதில் அளித்தார்.

ஊரை திருத்த முடியாது என்பது போல் நகராட்சி ஆணையர் பேசிய பேச்சு பொதுமக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. ஊழல் சம்பந்தமாக கூச்சல் குழப்பம் நிலவிய நிலையில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

  • ajith kumar receive padma bhushan award from president நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!