வாக்குச்சாவடியில் வாக்கு சேகரித்த திமுக : வாக்குவாதத்தில் ஈடுபட்ட அதிமுக.. தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பதற்றம்.. போலீசார் பேச்சுவார்த்தை!!

Author: Udayachandran RadhaKrishnan
19 February 2022, 7:02 pm

விழுப்புரம் : வாக்குச்சாவடி மையத்தின் உள்ளே வாக்களிக்க வருபவர்களிடம் வலுக்கட்டாயமாக நிறுத்தி திமுகவினர் ஓட்டு கேட்பதாக கூறி அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது.

விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட 18வது வார்டு திமுக அமைச்சர் பொன்முடி பகுதியில் இருக்கும் வாக்குச்சாவடியாகும். இந்த மையத்தில் திமுக முகவர் ஒருவர் திமுக சின்னம் பொருத்தப்பட்ட துண்டுப்பிரசுரம் மற்றும் பூத் ஸ்லிப் ஆகியவற்றை கையில் வைத்துக்கொண்டு வாக்களிக்க வந்த வாக்காளர்களிடம் வெளிப்படையாகவே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதாக அதிமுகவினர் புகார் அளித்துள்ளனர்.

புகார் அளித்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டி அதிமுகவினர் வாக்கு சாவடி மையத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்படவே அதிமுக திமுக இடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது.

இந்த பகுதியில் காவல்துறையினர் மற்றும் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு இருதரப்பினரையும் மோதலை தடுக்கும் வகையில் பேச்சுவார்த்தை நடத்தி இருதரப்பினரையும் கலைந்து போகச் செய்தனர். இதனால் சிறிது நேரம் விழுப்புரம் புதுச்சேரி சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

  • goundamani does not eat in home said by bayilvan கவுண்டமணியிடம் இருந்த மர்மம்? அந்த சாப்பாட்டுல என்ன இருக்கு? பின்னணியை உடைத்த பிரபலம்…