தாக்கு பிடிக்குமா திமுக? பாஜகவின் மதுபான ஊழல் கருவி கைகொடுக்குமா?

Author: Hariharasudhan
14 March 2025, 12:38 pm

மதுபான ஊழல் புகாரை அமலாக்கத்துறை ஆளும் திமுக அரசு மீது வைத்துள்ள நிலையில், இது 2026 தேர்தலில் எதிரொலிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

சென்னை: கடந்த 10 ஆண்டுகளாக டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சிதான் இருந்தது. ஆனால், ஆம் ஆத்மி ஆட்சியின் சர்ச்சைக்குரிய மதுபானக் கொள்கையில் முறைகேடுகள் நடந்திருப்பதாக குற்றம் சாட்டி அமலாக்கத்துறை, சிபிஐ ஆகிய மத்திய புலனாய்வு அமைப்புகள் களமிறங்கின.

இதன்படி, டெல்லி துணை முதலமைச்சராக இருந்த மணீஷ் சிசோடியாவில் தொடங்கிய இந்த கைது நடவடிக்கை, கடைசியாக டெல்லி முதலமைச்சராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் வரை நீடித்தது. இந்தக் கைது வரிசையில் தெலுங்கானா முதலமைச்சராக இருந்த சந்திரசேகர ராவ் மகளும், அம்மாநில எம்எல்சியுமான கவிதாவும் சிக்கி கைதானார்.

இதனால், டெல்லியில் ஆம் ஆத்மி 10 ஆண்டு கால ஆட்சியை பறிகொடுக்கவும் முதன்மைக் காரணமாக இருந்தது. இந்த நிலையில், இதே கருவியை தற்போது மத்திய அரசுக்கு தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசுக்கு எதிராக கையில் எடுத்துள்ளது. இதன் முன்னோட்டமாக, தமிழ்நாட்டில் மதுபான நிறுவனங்கள் மற்றும் தமிழ்நாடு அரசின் மதுபான விற்பனை நிறுவனமான டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.

dmk

இந்தச் சோதனை தொடர்பாக அமலாக்கத்துறை நேற்று வெளியிட்ட அறிவிக்கையில், டாஸ்மாக் மதுபான முறைகேடுகள் மூலம் அரசுக்கு ரூ.1,000 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், மதுபான பார்கள் டெண்டர்கள், மதுபானங்கள் கொள்முதல், மதுபானங்கள் விற்பனை என அனைத்திலும் அதீத முறைகேடுகளின் மூலம் ரூ,1,000 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது எனவும் அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது.

இதையும் படிங்க: 60 வயதில் 3வது திருமணம்… கல்யாண வயதில் உள்ள மகனை மறந்த பிரபல நடிகர்!

இதனை முன்கூட்டியே தெரிவித்து வந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நேற்று மாலை வீடியோ வெளியிட்டு, வருகிற திங்கள்கிழமை டாஸ்மாக் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்தார். இதனிடையே, தமிழகத்தின் பிரதான கட்சியான அதிமுகவும் இந்த ஊழலை முன்னிறுத்தி, பட்ஜெட் தாக்கலில் இருந்து வெளிநடப்பு செய்தது என்பதும் கவனிக்க வேண்டிய ஒன்று.

  • Love for Kayadu.. he composer who shocked the film crew கயாடு மீது காதல்? படக்குழுவுக்கு அதிர்ச்சி கொடுத்த இசையமைப்பாளர்.. இதெல்லாம் தேவையா?