‘பேனரில் என் பெயர் ஏன் இல்லை?’… பள்ளி திறப்பு விழாவை நடத்த திமுக நிர்வாகி எதிர்ப்பு ; நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டதால் பொதுமக்கள் அதிருப்தி..!!

Author: Babu Lakshmanan
16 November 2022, 1:13 pm

திருவள்ளூர் ; பொன்னேரி அருகே வண்ணிப்பாக்கம் கிராமத்தில் பள்ளி கட்டிடம் திறப்பதில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினரிடையே எழுந்த போட்டியால் பள்ளி திறப்பு விழா ஒத்திவைக்கப்பட்டது பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த வன்னிப்பாக்கம் கிராமத்தில் சுமார் 19 லட்சம் மதிப்பீட்டில் பள்ளி கட்டிடம் ஒன்று கட்டி முடிக்கப்பட்டது. இதற்கான திறப்பு விழா இன்று காலை 9 மணி அளவில் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் தலைமையில் திறந்து வைப்பதாக நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

thiruvallur school open - updatenews360

இதற்கான பேனர்கள், கட்சி கொடிகள் என விழா ஏற்பாடு சிறப்பாக செய்யப்பட்டு கிராம பொதுமக்கள், பள்ளி குழந்தைகள், பெற்றோர்கள் என அனைவரும் கூடியிருந்தனர். மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாக செயலாளராக பதவி வகித்து வரும் ரமேஷ் ராஜ் என்பவரின் பெயர் இடம் பெறவில்லை எனக்கூறி நிகழ்ச்சியை நடத்தக் கூடாது என அவர் ஆட்சேபனை தெரிவித்துள்ளார்.

thiruvallur school open - updatenews360

இதனால், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் சமாதான முயற்சியில் ஈடுபட்டதாகவும், இதனால் நிகழ்ச்சி மற்றொரு நாளுக்கு மாற்றி வைப்பதாகவும் தெரிவித்தனர்.

thiruvallur school open - updatenews360

ஏற்கனவே,ஒரு முறை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு மழை குறுக்கிட்டதால் தடைபட்டதாகவும், தற்போது திமுக – காங்கிரஸ் யார் திறப்பது போட்டியால் நிகழ்ச்சி நடைபெறாமல், நான்கு மணி நேரத்திற்கு மேலாக காக்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 492

    0

    0