‘சாதி சொல்லி மிரட்டுறாங்க’ ; திமுக ஊராட்சிமன்ற தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்த திமுக கவுன்சிலர் ; பரபரப்பு புகார்!!

Author: Babu Lakshmanan
13 March 2023, 4:25 pm

வேலூர் ; தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டி திமுக ஒன்றிய கவுன்சிலர் மகாலிங்கம் மற்றும் திமுக ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் மீது அணைக்கட்டு கங்கநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார்மாவட்ட ஆட்சியரிடம் குடும்பத்துடன் புகார் அளித்தார்.

வேலூர் அணைக்கட்டு மாவட்டம் கங்கநல்லூர் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் செந்தில்குமார். இவர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உட்பட கிராம மக்கள் 50க்கும் மேற்பட்டோருடன் மாவட்ட ஆட்சியரை சந்தித்து தனது ஊரைச் சேர்ந்த திமுக ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் மகாலிங்கம் ஆகியோர் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும், என் பிள்ளைகளுக்கும், என் குடும்பத்திற்கும், என் உயிருக்கும் பாதுகாப்பு தர வேண்டும் என்றும் இன்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தார்.

அவர்கள் ஊரில் உள்ள ஏரிக்கரையை உடைத்து ஏரியில் உள்ள மண்ணை கொள்ளையடித்து விற்பனை செய்து வருவதாகவும், அதை தடுக்க வேண்டி கேட்டதற்கு தன்னை கொலை செய்து விடுவதாகவும் அவர் புகார் தெரிவித்தார். மேலும், இதே ஏரியில் உன்னை கொலை செய்து இங்கே புதைத்து விடுவேன் என்று மிரட்டியதாகவும், மேலும், சாதி ரீதியாக தன்னை மிரட்டுவதாகவும், சாதியை மையப்படுத்தி அவமானப்படுத்தி பேசுவதாகவும் அந்த புகாரில் தெரிவித்து இருந்தார்.

புகாரை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் இது குறித்து காவல்துறை மற்றும் வருவாய் துறைக்கு விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டு உரிய ஆவணம் செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.

எவ்வளவுதான் விஞ்ஞானம் வளர்ந்தாலும் மக்களிடையே சாதிய வேற்றுமை ஒழிந்து ஒற்றுமை நிலவ வேண்டும் என்று அரசு தரப்பிலும், பல்வேறு இயக்கங்கள் மூலமாக மக்களிடையே தெளிவை ஏற்படுத்தினாலும். இன்னும் சாதி ரீதியான தாக்குதல் தொடர்ந்து கொண்டிருப்பது வேதனையை அளிக்கிறது.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 656

    0

    0