திமுக கவுன்சிலரை புரட்டியெடுத்த சக திமுக கவுன்சிலர்… வேலூரில் பரபரப்பு ; கும்பலாக தாக்கிய அதிர்ச்சி சிசிடிவி காட்சி!!

Author: Babu Lakshmanan
29 September 2023, 2:17 pm

வேலூரில் திமுக கவுன்சிலரை தாக்கிய சக திமுக கவுன்சிலர், தன்னுடைய ஆதரவாளர்களுடன் தாக்கும் சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் சிசிடிவி காட்சிகள் வெளியாகிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட 24 வது வார்டு திமுக கவுன்சிலர் சுதாகர், இவர் நேற்று இரவு (28.09.2023) வேலூர் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள தனியார் ஓட்டலில் இருந்துள்ளார்.

அப்போது, 30 வது வார்டு திமுக கவுன்சிலர் முருகன் என்பவர் தனது ஆதரவாளர்களுடன் சென்று கவுன்சிலர் சுதாகரை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் படுகாயம் அடைந்த சுதாகர் அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து வேலூர் வடக்கு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

https://player.vimeo.com/video/869470069?badge=0&autopause=0&player_id=0&app_id=58479
  • திடீரென மொட்டையடித்த சுந்தர்.சி.. ரூ.1 லட்சம் நன்கொடை.. விறுவிறுப்படையும் மூக்குத்தி அம்மன் 2!