ஸ்டாலின் வாராரு.. விடியல் தர போறாரு.. என நம்பி வாக்களித்த மக்களுக்கு தெருவிளக்கு வசதி கூட திமுக நகராட்சி நிர்வாகம் செய்து தரவில்லை என்று திருவாரூர் நகரமன்ற கூட்டத்தில் திமுக உறுப்பினர் குற்றச்சாட்டால் பரபரப்பு நிலவியது.
திருவாரூர் நகராட்சியின் சாதாரண கூட்டம் திமுகவை சேர்ந்த நகரமன்றத்தலைவர் புவனப்பிரியா தலைமையில் நடைபெற்றது. 30 வார்டுகளைக் கொண்ட திருவாரூர் நகராட்சியில் பெரும்பான்மையான வார்டு உறுப்பினர்கள் திமுக வசம் இருந்து வருகிறது.
மேலும், பெரும்பாலான வார்டுகளில் சாதாரண அத்தியாவசிய அடிப்படை தேவைகள் கூட நகராட்சி நிர்வாகத்தால் செய்து தரவில்லை என்ற குற்றச்சாட்டினை திமுக நகரமன்ற உறுப்பினர்கள் பலர், தங்களது வார்டில் உள்ள பிரச்சனைகளை நகரமன்ற கூட்டத்தில் எடுத்து வைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திமுக உறுப்பினர்களே முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியினை நகரமன்ற கூட்டத்தில் விமர்சிக்கும் வகையில், அவர்களது குற்றச்சாட்டு அமைந்தது.
7வது வார்டு திமுக நகரமன்ற உறுப்பினர் வரதராஜன் பேசுகையில், எங்களது வார்டில் தெருவிளக்கு எரியவில்லை எனவும், குடிதண்ணீர் வரவில்லை, தினசரி குப்பைகள் அள்ளி சுகாதாரத்தை பேணப்படவில்லை என அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை சுமத்தியதோடு, திமுக ஆட்சிக்கு வந்தால் விடியல் வரும் என நினைத்தோம். வார்டில் தெருவிளக்கு கூட ஏரியாமல் இருண்டு கிடப்பதாகவும் இதுசம்மந்தமாக பலமுறை நகரமன்ற கூட்டத்திலும், அதிகாரிகளிடம் பேசியும் எந்த பிரோஜனமும் இல்லை, என்றார்.
மேலும், வார்டு மக்கள் எங்களை பார்த்து விடியல் தருவதாக கூறி வார்டை விடியாமல் ஆக்கிவிட்டீர்களே என ஏலனமாக பேசிவருவதாக தெரிவித்தார். குப்பை அள்ளும் பணியில் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு 70 பேர் மட்டும் பணியில் இருந்துவரும் நிலையில், நகராட்சி நிர்வாகம் 110க்கும் மேற்பட்டவர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருப்பதாக கூறி கூட்டத்தில் புகார் தெரிவித்தார்.
திமுக நகரமன்ற உறுப்பினர் வரதராஜன் குற்றச்சாட்டின் மூலம் கூடுதலாக 50 பேர் துப்புறவு பணியாளர்களாக போலியாக கணக்கு காட்டப்பட்டு ஊழல் நடைபெறுவது தெரியவருகிறது.
இந்நிலையில், திருவாரூர் நகர திமுக செயலாளரும், வார்டு உறுப்பினருமாக பிரகாஷ் பேசுகையில், திருவாரூர் நகராட்சியில் குப்பை அள்ளும் பணி சரிவர நடைபெறவில்லை எனவும், இதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் சுகாதார சீர்கேட்டினை பற்றி பேசுவதற்கு மாறாக, தேர்தல் வரபோகிறது எங்களது ஆட்சிக்கு கெட்டப்பெயர், என பேசினார்.
தொடர்ந்து பெரும்பாலான திமுக நகரமன்ற உறுப்பினர்கள் நகரமன்ற கூட்டத்தில் பேசுகையில், தங்களது வார்டுகளில் சாலைவசதி இல்லை, வார்டு நலன்கருதி நகரமன்ற உறுப்பினர்கள் வைக்கும் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் தங்களது இஷ்டத்திற்கு நகராட்சி நிர்வாகம் செயல்படுவதாகவும் குற்றம்சாட்டினர்.
அட்டர் பிளாப் பாலிவுட்டில் ஏ.ஆர்.முருகதாஸ் சல்மான் கானை வைத்து இயக்கிய திரைப்படம் “சிகந்தர்”. இதில் சல்மான் கானுக்கு ஜோடியாக ராஷ்மிகா…
5 கோடி இழப்பீடு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நடைபெறும் வக்பு திருத்தச்…
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காந்தி கலையரங்கத்தில் சட்ட மாமேதை அம்பேத்கரின் பிறந்த நாள் விழா, வக்ஃபு வாரிய சட்ட திருத்தம்…
வைகைப்புயல் மீது பிராது வைகைப்புயல் என்று அழைக்கப்படும் காமெடி நடிகர் வடிவேலு கோலிவுட்டின் டாப் காமெடி நடிகராக வலம் வந்த…
This website uses cookies.