திமுக பெண் கவுன்சிலர் சடலமாக மீட்பு.. அரைநிர்வாணத்துடன் காட்டுப்பகுதியில் கிடந்த உடல் ; கரூரில் அதிர்ச்சி சம்பவம்..!!

Author: Babu Lakshmanan
26 September 2023, 6:53 pm

கரூர் அருகே காட்டுப்பகுதியில் திமுகவை சேர்ந்த பேரூராட்சி பெண் கவுன்சிலர் கொலை செய்யப்பட்டு அரை நிர்வாணத்துடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம், கொடுமுடி அடுத்த சோழ காளிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரூபா (42). இவரது கணவர் தங்கராசு கறிக்கடை வைத்து நடத்தி வருகிறார். ரூபா ஈரோடு மாவட்டம், சென்ன சமுத்திரம் பேரூராட்சி வார்டு கவுன்சிலராக (திமுக) பொறுப்பில் உள்ளார்.

இவர் கரூர் மாநகரப் பகுதியில் உள்ள ஜவுளி ஏற்றுமதி நிறுவன உரிமையாளர் வீட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று வழக்கம்போல் வீட்டிலிருந்து புறப்பட்டு, கரூர் வந்த அவர் இரவு வீடு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், இன்று மதியம் கரூர் மாவட்டம், பவுத்திரம் ஊராட்சிக்குட்பட்ட பாலமலை முருகன் கோவில் அருகில் உள்ள காட்டுப்பகுதி ஒன்றில் தலை நசுங்கிய நிலையில், அரை நிர்வாணத்துடன் சடலமாக கிடந்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த க.பரமத்தி காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரூபாவின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, கொலை செய்த நபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆளும் கட்சியான திமுகவைச் சேர்ந்த கவுன்சிலர் கொலை செய்யப்பட்டிருப்பது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்