பெண் கவுன்சிலரை ஆபாசமாக திட்டிய திமுக கவுன்சிலர்.. ‘பதவி தேவையில்லை’ என பதிலடி கொடுத்த ஆடியோ வைரல்…!!

Author: Babu Lakshmanan
14 October 2022, 2:29 pm

ஆபாசமாக திட்டிய திமுக கவுன்சிலரிடம், பதவியை ராஜினாமா செய்து கொள்கிறேன் என பெண் கவுன்சிலர் பேசும் ஆடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகராட்சி 29வது வார்டில் நடந்த குளம் தூர்வாரும் பணியை எம்எல்ஏ பார்வையிட வந்துள்ளார். அப்போது, அந்த வார்டின் திமுக பெண் கவுன்சிலர் கலைவாணிக்கு எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து கலைவாணியின் கணவர் கார்த்திகேயன், கட்சிக்காரர்களிடம் சொல்லி ஆதங்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், திமுக நகர செயலாளர் வீரகணேசனின் ஆதரவாளரும், 11வது வார்டு கவுன்சிலருமான பாண்டவர் என்பவர் கவுன்சிலரின் கணவர் கார்த்திகேயனை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது, அவரது அழைப்பை கலைவாணி எடுக்க, அவரது கணவரை ஆபாசமான வார்த்தைகளில் திட்டியுள்ளார்.

ஒருகட்டத்தில் கலைவாணி, தன்னுடைய பதவியை ராஜினாமா செய்து கொள்கிறேன் என்று சொல்லும் அளவிற்கு, கவுன்சிலர் பாண்டவர் ஆபாச வார்த்தைகளால் வசைபாடியுள்ளார். இது தொடர்பான ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!