திமுக மேயருக்கு திமுக பெண் கவுன்சிலர் கடும் எதிர்ப்பு… பொதுமக்களுடன் திடீர் சாலை மறியல் ; மதுரையில் பரபரப்பு..!!

Author: Babu Lakshmanan
22 August 2023, 1:41 pm

மதுரை மாநகராட்சியின் திமுக மேயரை கண்டித்து திமுக பெண் கவுன்சிலர் ஒருவரே பொதுமக்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாநகராட்சி 79ஆவது வார்டுக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும், கடந்த சில வாரங்களாக குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அந்த பகுதி திமுக பெண் கவுன்சிலர் லக்சிகாஸ்ரீ பலமுறை மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையாளரிடம் பலமுறை புகார் அளித்துள்ளார்.

ஆனால், தங்களின் மனு மீது எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த கவுன்சிலர் லக்சிகாஸ்ரீ, அப்பகுதி மக்களை திரட்டி, சொந்த கட்சியை சேர்ந்த மாநகராட்சி மேயரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டார்.

மக்கள் குறைகளை தீர்க்க மதுரை மாநகராட்சி மேயரை கண்டித்து சொந்த கட்சி கவுன்சிலரே போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏறபட்டது.

  • what is the problem on sikandar salman khan asks people படத்துல என்ன பிரச்சனை, உங்க கருத்தை சொல்லுங்க- பப்ளிக்கை நேரடியாக சந்தித்த சல்மான் கான்!