”நிஜமா நான் செஞ்ச பாவம்” : தனுஷ் பாடலுக்கு கல்லூரி மாணவிகளுடன் திமுக கவுன்சிலர்கள் நடனம்.. வைரலாகும் வீடியோ!!
Author: Udayachandran RadhaKrishnan9 March 2023, 2:18 pm
முன்னாள் திமுக அமைச்சர் முன்னிலையில் மகளிர் தின விழாவில் கல்லூரி மாணவிகளுடன் தனுஷ் பாடலுக்கு திமுக கவுன்சிலர்கள் நடனமாடியது சமூக வலைதளங்களில் வைரல்.
கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் மகளிர் தினத்தை ஒட்டி சமுதாயத்தில் வெற்றி பெற்ற பெண்மணிகளை கௌரவிக்கும் விழா நடைபெற்றது.
இந்த விழாவில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி கலந்துகொண்டு வெற்றி பெற்ற பெண்மணிகளுக்கு நினைவு பரிசு வழங்கினார்.
அதில் கோவை மாநகராட்சி கவுன்சிலர்களான மண்டல தலைவர்கள் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக், மீனாலோகு, தனலட்சுமி, தெய்வானை தமிழ்மறை, புஸ்பலதா ராஜகோபால் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டது.
பின்னர் இந்த விழாவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் மாணவிகளுடன், மாநகராட்சி திமுக கவுன்சிலரும்மாநகராட்சியின் மண்டல தலைவர்கள் மீனாலோகு, தனலட்சுமி ஆகியோர் தனுஷ் பாடலுக்கு மாணவிகளுடன் சேர்ந்து நடனமாடியது மாணவர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியது.
மேலும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.