திமுக கவுன்சிலரின் கணவருக்கு அரிவாள் வெட்டு… திமுக ஆட்சியில் திமுகவினருக்கே பாதுகாப்பு இல்லையா?
Author: Udayachandran RadhaKrishnan14 February 2025, 10:26 am
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட இரண்டாவது வார்டில் பேரூராட்சிக்கு சொந்தமான கிணற்றில் மற்றொரு பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து கட்டப்பட்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டிக்கு குடிநீர் பைப் லைன் அமைப்பதற்கு 7 வது வார்டு திமுக கவுன்சிலரின் உமா மகேஸ்வரி கணவரான கோவிந்தன் என்பவர் டெண்டர் எடுத்து செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பங்களா தெருவில் பைப்லைன் அமைத்துக் கொண்டிருப்பபோது அந்த பகுதியைச் சேர்ந்த வல்லரசு என்பவர் பைப்லைன் பள்ளத்தை உடனடியாக அகற்று என கவுன்சிலரின் கணவரான கோவிந்தனிடம் வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது.
வாக்குவாதம் ஏற்பட்டதில் திடீரென திமுக கவுன்சிலரின் கணவரை அரிவாளால் வெட்டியதில் ரத்த வெள்ளத்தில் துடி துடித்தார்.
இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் கவுன்சிலரின் கணவரை மீட்டு முதலுதவி சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தினர்.
மேலும் மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர்.
இதனை அறிந்த உறவினர்கள் திடீரென குற்றவாளியை உடனடியாக கைது செய்ய வேண்டுமென மும்முனை சந்திப்பில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி
சம்பவ இடத்திற்கு வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பங்களா தெருவை சேர்ந்த வல்லரசு என்ற இளைஞரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட இளைஞர்
சங்கராபுரம் பகுதியில் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் தலைமையில் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜத் சதுர்வேதி மேற்பார்வையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தி வருகின்றனர்.
இது மட்டுமில்லாமல் இந்த பகுதியின் திமுக கவுன்சிலரின் கணவருக்கு அரிவாளால் வெட்டிய சம்பவத்தால் முக்கிய கடைவீதிகள் மூடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் திமுக ஆட்சியில் திமுக கவுன்சிலரின் கணவருக்கு அரிவாளால் வெட்டியதால் திமுகவினருக்கே பாதுகாப்பு இல்லை என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் குற்றம் சாட்டி வருகின்றனர்.