அரசு பள்ளிக்குள் நுழைந்து தலைமையாசிரியரின் கழுத்தை நெறித்த திமுக கவுன்சிலரின் கணவர் : தலைக்கேறிய போதையில் மிரட்டல் விடுத்த வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
20 September 2022, 4:54 pm

அவிநாசியில் அரசு துவக்கப் பள்ளியில் புகுந்து திமுக கவுன்சிலரின் கணவர் தலைமை ஆசிரியரை தாக்கும் வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டிபுதூர் பகுதியில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இதில் 60க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இந்தப் பள்ளியின் பின்புறம் உள்ள பாஸ்கர் என்பவரது வீட்டிலிருந்து
தினமும் பள்ளி வளாகத்திற்குள் குப்பைகள் கொட்டப்படுவதால் சுகாதார கேடு ஏற்படுகிறது என தலைமை ஆசிரியர் குப்பைகளை இங்கு கொட்ட வேண்டாம் என பல முறை தெரிவித்து வந்துள்ளார்.

இந்நிலையில், பள்ளி வாளகத்தில் உள்ள செடிகளுக்கு பள்ளி மாணவர்கள் தண்ணீர் ஊற்ற சென்ற போது, பக்கத்து வீட்டை சேர்ந்தவர் கழிவுநீரை பள்ளி மாணவர்கள் மீது ஊற்றியுள்ளார்.

இது குறித்து மாணவர்கள் எதிர்த்து கேட்டபோது, ஆத்திரமடைந்த பக்கத்து வீட்டை சேர்ந்த பாஸ்கர் பள்ளி மாணவர்கள் 6 பேரை அடித்து விரட்டி உள்ளார்.
இச்சம்பவம் குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் அவிநாசி காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து சம்பந்தப்பட்ட பாஸ்கரை கண்டித்துள்ளனர். மேலும் மாணவர்கள் தாக்கப்பட்டதை அடுத்து பெற்றோர்கள் பள்ளியில் விசாரிப்பதற்காக வந்துள்ளனர்.

அப்பொழுது மாணவர்களை தாக்கிய பாஸ்கருக்கு ஆதரவாக அவிநாசி பேரூராட்சி 17வார்டு உறுப்பினர் திமுகவைச் சேர்ந்த ரமணி என்பவரின் கணவர் துரை என்பவர் பள்ளிக்கு வந்து ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களிடம் குடிபோதையில் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்.

நீங்கெல்லாம் யாரு, இங்க எதுக்குடா பிரச்சன பன்றீங்க நீங்க இதையெல்லாம் கேட்க கூடாது என்று போதையில் ஒருமையில் பள்ளி குழந்தைகளின் முன்பாகவே அனைவரையும் அநாகரீகமாக பேசினார்.

அதற்கு தலைமை ஆசிரியர் நீங்க தப்ப தட்டிகேட்க வேண்டியதுதானே என்று கூறவும், கோபத்தின் உச்சத்தில் சென்ற கவுன்சிலர் கணவர் தலைமை ஆசிரியர் செந்தாமரை கண்ணனை கழுத்தை நெறித்து தாக்கிவிட்டு அங்கிருந்து செல்கிறார்.

பள்ளி தலைமை ஆசிரியரை பள்ளி நேரத்தில், பள்ளி குழந்தைளின் கன் முன்னே தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தி.மு.க. கவுன்சிலரின் கணவர் பள்ளி தலைமையாசிரியரை தாக்குவதை அருகில் இருந்தவர் தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

அரசு ஊழியராக உயர் பொறுப்பில் உள்ளவரை திமுக கவுன்சிலரின் கணவர் தாக்கியது பொதுமக்களிடையே எரிச்சலடைய வைத்துள்ளது.

திமுக ஆட்சியமைத்தது முதல் திமுக நிர்வாகிகள் பொதுமக்களுக்கு இடையூறாக பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருவதுடன், திமுக கவுன்சிலர்களின் கணவன்மார்கள் இது போன்று பல்வேறு அத்துமீறல்களில் ஈடுபடுவது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.

  • sivakarthikeyan movie cameraman ravi k chandran had chest pain திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலி; சிவகார்த்திகேயன் பட ஷூட்டிங்கில் நடந்த திடீர் சம்பவம்!