‘மாநகராட்சியில் ஒரு பணி கூட நடக்குல’… பதவியை ராஜினாமா செய்வோம் ; திமுக மேயருக்கு எதிராக கிளம்பிய திமுக கவுன்சிலர்கள்…!!

Author: Babu Lakshmanan
22 நவம்பர் 2023, 6:18 மணி
Quick Share

வேலூர் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கூட செய்து தரவில்லை என திமுக மாமன்ற உறுப்பினர்களே குற்றம்சாட்டுகின்றனர்.

வேலூர் மாவட்டம் வேலூர் மாநகராட்சியில் உள்ள மாமன்ற கூட்டரங்கில் மாநகராட்சி கூட்டமானது வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் துணை மேயர் சுனில் மற்றும் ஆணையர் ஜானகி சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில், ஒன்றாவது வார்டு திமுக மாமன்ற உறுப்பினர் அன்பு பேசுகையில், “தெருவிளக்குகள் எரிவதில்லை. அது குறித்து பல முறை புகார் கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும், கழிவு நீரும் குடிநீர் கலந்து வருகிறது. சாலைகள் சீர் செய்யப்படவில்லை மொத்தத்தில் ஒரு பணி கூட நடக்கவில்லை என குற்றம்சாட்டி பேசினார்.

இதே போன்று காட்பாடியை சேர்ந்த திமுக ஒன்றாவது மண்டல குழு தலைவர் புஷ்பலதா பேசுகையில், “மாநகராட்சி மக்கள் பணிகளை சரிவர செய்வதில்லை. மக்கள் மாமன்ற உறுப்பினராகிய எங்களை சரமாரியாக கேள்வி கேட்கின்றனர். என்ன பதில் சொல்ல முடியும். தெருவிளக்குகளும் எரிவதில்லை, சாலை வசதி, குடிநீர் போன்ற வசதிகளுமில்லை.

நான் ஆகவே இந்த குறைகளை மீண்டும் மீண்டும் தெரிவிக்கிறேன். இவைகளை சரி செய்யவில்லை என்றால், எனது பதவியை ராஜனாமா செய்யவுள்ளேன், என திமுக மண்டல குழு தலைவரே மாமன்ற கூட்டத்தில் பேசியதால் மாமன்றத்தில் உள்ள மற்ற திமுக மாமன்ற உறுப்பினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

  • Manickam Tagore விஜய்யால் கட்சியின் கூடாரம் காலியாகிறதா? காங்கிரஸ் தலைவர்கள் அடுத்தடுத்து பதில்!
  • Views: - 893

    0

    0