கரூர் மாநகராட்சி கூட்டத்தில் செய்தியாளர்களுக்கு அனுமதி மறுப்பு… திமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு..!!

Author: Babu Lakshmanan
31 October 2023, 2:48 pm

கரூர் மாநகராட்சியின் மாதாந்திர கூட்டத்தில் திமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு நிலவியது.

கரூர் மாநகராட்சியின் மாதாந்திர சாதாரண கூட்டம் மாதாமாதம் நடைபெறுவது வழக்கம். அந்த வரிசையில், இன்று மாநகராட்சியின் கூட்டம் கூட்டரங்கில் நடைபெற்றது. மேயர் கவிதா கணேசன் தலைமையில், ஆணையாளர் சரவணக் குமார் முன்னணிலையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

அதிமுக கவுன்சிலர்கள் 2 பேரை கடந்த கூட்டத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்டதால் அவர்கள் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது. கூட்டம் துவங்கிய சில நிமிடங்களில் செய்தியாளர்கள் 5 நிமிடங்களில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தப் பிறகு வெளியேறும்படி ஒலிபெருக்கியில் மேயர் தெரிவித்தார். இதனை தொடர்ந்து, செய்தியாளர்கள் வெளியேறினர்.

வாசற்கதவு பூட்டப்பட்ட நிலையில் தாமதமாக வந்த கவுன்சிலர்கள், கவுன்சிலர்கள் ஆதரவாளர்கள், பெண் கவுன்சிலர்களின் கணவர்கள் கூட்டரங்கிற்குள் அனுமதித்தனர். கூட்டம் துவங்கி சுமார் 1 மணி நேரம் நடைபெற்ற நிலையில், ஆணையாளரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக கவுன்சிலர்கள் கூட்டரங்கை விட்டு வெளிநடப்பு செய்தனர்.

மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளில் பல ஆண்டுகளாக வாடகை பாக்கி வசூல் செய்வது தொடர்பாக எழுந்த வாக்குவாதத்திற்குப் பிறகு கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்யப்பட்டதாக சொல்லப்படும் நிலையில், வெளிநடப்பு செய்யப்பட்ட கவுன்சிலர்கள் துணை மேயர் அறையில் முகாமிட்டுள்ளனர்.

கூட்டரங்கை விட்டு வெளியேறிய ஆணையாளர் தனது காரில் ஏறி புறப்பட்டுச் சென்றார். இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

  • Rafael Nadal retirement reaction by Dhanush ஓய்வு அறிவிப்பு.. நடிகர் தனுஷின் உருக்கமான பதிவு..
  • Views: - 371

    0

    0