திமுக கவுன்சிலரின் கணவருக்கு கத்திக்குத்து: 4 இடங்களில் குத்தப்பட்ட கத்தி: முன் விரோதம் காரணமா….!?

Author: Sudha
10 August 2024, 5:46 pm

தென்காசி மாவட்டம் மேலகரம் திமுக கவுன்சிலரின் கணவரை கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திமுக நிர்வாகிகளுக்குள் ஏற்பட்ட உட்கட்சி பூசல் இதற்கு காரணம் என சொல்லப்படுகிறது.சாலையில் நின்றிருந்த திமுக கவின்சிலரின் கணவர் சண்முகத்தை அந்த வழியாக பைக்கில் வந்த மேலகரம் பேரூராட்சியின் திமுக செயலாளர் சுடலை கத்தியால் குத்தியுள்ளார்.

நிலைகுலைந்த கவுன்சிலரின் கணவர் சண்முகத்தை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.உடலின் 4 இடங்களில் கத்திக்குத்து இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

  • Laika Productions exits Jason Sanjay film விஜய் அரசியலால் ஜேசன் சஞ்சய் படப்பிடிப்பில் சிக்கல்..லைக்கா எடுக்கப்போகும் அதிரடி முடிவு.!