ஜெருசலேம் யாத்திரைக்கு திமுக ஒருவரை கூட அனுப்பவில்லை.. பொய் வேடம் போடும் முதலமைச்சர் ஸ்டாலின் : இபிஎஸ் குற்றச்சாட்டு!!
Author: Udayachandran RadhaKrishnan29 November 2023, 9:04 am
ஜெருசலேம் யாத்திரைக்கு திமுக ஒருவரை கூட அனுப்பவில்லை.. பொய் வேடம் போடும் முதலமைச்சர் ஸ்டாலின் : இபிஎஸ் குற்றச்சாட்டு!!
சிறுபான்மை நலனுக்காக திமுக ஒன்றுமே செய்யவில்லை என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

கருத்தம்பட்டி கிறிஸ்தவ மாநாட்டில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கூறியதாவது, சிறுபான்மை நலனுக்காக நன்மை செய்வதாக பொய் வேடம் போட்டு முதலமைச்சர் ஸ்டாலின் ஏமாற்றியுள்ளார்.
கச்சத்தீவை வாரி வழங்கியதன் காரணமாக அங்குள்ள அந்தோணியார் ஆலயத்துக்கு செல்ல கிறிஸ்தவர்கள் இலங்கையிடம் கையேந்தி நிற்க்கின்ற நிலை இருக்கிறது. ஆனால் எப்போதுமே சிறுபான்மையின மக்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் அதிமுக பாதுகாப்பு அரணாக இருக்கும். இந்த மாநாட்டில் நீங்கள் விடுத்த கல்லறை தோட்டம் உள்ளிட்ட கோரிக்கைகள் கண்டிப்பாக அதிமுக ஆட்சி வந்ததும் நிறைவேற்றப்படும். இப்போது நீங்கள் திமுகவின் தந்திரத்தை புரிந்துகொண்டிருப்பீர்கள். இவ்வாறு அவர் கூறினார்.