வீட்டில் வைத்து பணம் விநியோகித்த திமுகவினர்: முற்றுகையிட்ட அதிமுக தொண்டர்கள்…கோவையில் மீண்டும் பரபரப்பு..!!

Author: Rajesh
19 February 2022, 11:40 am

கோவை: கோவை இடையர்பாளையம் பகுதியில் பணம் வழங்கிய திமுக.,வினரை அதிமுக தொண்டர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கோவை குனியமுத்தூர் 93 வது வார்டு இடையர்பாளையம் பகுதியில் உள்ள வீட்டில் திமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்கப்பட்டு வருவதாக கிடைத்த தகவலின் பேரில் அதிமுக தொண்டர்கள் அந்த வீட்டை முற்றுகையிட்டனர்.

வேட்பாளர்களுக்கு பணம் வழங்கக்கூடாது என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் வரும் நாளில் கூட திமுகவினர் பணப்பட்டுவாடா செய்வதாக அடுத்தடுத்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!