வாக்குச்சாவடிக்கு அருகில் பணம் விநியோகிக்கும் திமுக: கோவையில் அ.தி.மு.க, பா.ஜ.க.,வினர் போராட்டம்..!!

Author: Rajesh
19 February 2022, 9:51 am

கோவை: கோவை 63வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்குச்சாவடி மையத்திற்கு அருகிலேயே தி.மு.க.,வினர் பொதுமக்களுக்கு பணம் விநியோகித்து வருவதாக கூறி அதிமுக மற்றும் பாஜக தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு திமுகவினர் பல்வேறு இடங்களில் பணம், ஹாட் பாக்ஸ், கொலுசு உள்ளிட்ட பரிசுப் பொருட்களை வழங்கி வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.

இதனிடையே கோவை மாநகராட்சி 63 வது வார்டு ராமநாதபுரம் 80 அடி சாலையில் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையத்தின் அருகிலேயே, திமுக.,வினர் பணம் மற்றும் பரிசு பொருட்களை வழங்கி வருகின்றனர்.

வாக்குச்சாவடி மையத்தின் அருகே உள்ள மண்டபத்தில் வைத்து பொதுமக்களுக்கு பணம் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதனைக் கண்டித்து வாக்குச்சாவடி மையத்தில் உள்ள அதிமுக மற்றும் பாஜக முகவர்கள் திடீரென ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தேர்தல் நியாயமான முறையில் நடைபெறவில்லை என்றும் உடனடியாக தேர்தலை நிறுத்த வேண்டும் என்றும் அவர்கள் ஆர்ப்பாட்டத்தின்போது கோஷங்களை எழுப்பினர்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 1296

    0

    0