திமுக மாவட்ட செயலாளர்கள் பெண்களை அடிமை போல நடத்துறாங்க : உண்மையை உடைத்த மகளிர் அணி தலைவி!

Author: Udayachandran RadhaKrishnan
29 ஆகஸ்ட் 2024, 7:20 மணி
DMK Womn Wing
Quick Share

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டரணி கலந்தாய்வு கூட்டம் கவரப்பேட்டையில் திமுக கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் மாநில மகளிர் ஆணைய தலைவரும் திமுக மாநில மகளிர் அணி இணைச் செயலாளருமான குமரி விஜயகுமார் மற்றும் திமுக பிரச்சாரக் குழு செயலாளர் சேலம் சுஜாதா ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.

மகளிர் ஆணைய தலைவர் குமரி விஜயகுமார் பேசுகையில் திமுகவில் சில இடங்களில் மாவட்ட கழக செயலாளர்கள் பெண்களை அமரவே விட மாட்டார்கள் நிற்க வைப்பார்கள் அடிமை மாதிரி நடத்துவார்கள் அவர்களிடம் நான் சண்டையே போட்டுள்ளேன்.

ஆனால் இங்கு மாவட்ட செயலாளர் அப்படி இல்லை என்றும் மகளிருக்காக அனைத்தையும் செய்து தருகிறார் என்றும் சில சின்ன குறைகள் மட்டுமே உள்ளது ஆங்காங்கு நடைபெறும். ஒப்பந்த பணிகளில் சிறு சிறு பணிகளை பெண்களுக்கும் வழங்க வேண்டும் என மகளிர் கோரிக்கை வைப்பதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

பின்னர் பேசிய கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி ஜே கோவிந்தராஜன், திமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தி வருவதாகவும் 234 இடங்களில் 200க்கும் மேற்பட்ட இடங்களில் ஜெயிக்க வேண்டும் என்பதை சவாலாக எடுத்துக் கொண்டு அனைவரும் செயல்பட வேண்டும் என்றும் தேர்தல் நெருங்கும் நேரத்தில் எதிர்க்கட்சிகள் குஷ்பு போன்றவர்கள் ஹிந்தி காரி, மகளிருக்கான உரிமைத்தொகை
ஆயிரம் ரூபாய் உனக்கு பிச்சைக் காசாக இருக்கலாம் எங்களுக்கு பெருந்தொகை என வாட்ஸ் அப்பில் பதிவு போட்டு மகளிர் அனைவருக்கும் குழுக்களில் அனுப்பி வையுங்கள் என மகளிர் ஆணைய தலைவர் குமரி விஜயகுமார் முன்னிலையில்
சர்ச்சைக்குரிய வகையில் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். அப்படி வாட்ஸ் அப்பில் பதிவு போட்டு அனுப்புவதில் தவறு இல்லை என்றும் சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

  • PK என்ன ஒரு தைரியம்… புதிய கட்சியை தொடங்கி மதுக்கடைகளை திறப்பேன் என பிரசாந்த் கிஷோர் வாக்குறுதி!
  • Views: - 171

    0

    0