‘தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது’: முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ சாடல்..!!

Author: Rajesh
28 March 2022, 6:16 pm

மதுரை: தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் திமுக இரட்டை வேடம் போடுவதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு குற்றச்சாட்டியுள்ளார்.

மதுரையில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற மாமன்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பட்டியலை வெளியிட்ட பின்பு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களிடம் கூறியதாவது, மாநகராட்சி தேர்தலில் 70 சதவீதம் அதிமுக வெற்றி பெற்று இருக்கும் கடைசி மூன்று நாட்களில் நிலைமை மாறிவிட்டது.

இல்லையென்றால், அதிமுக வரலாற்று வெற்றி பெற்று இருக்கும், தலைவர் மற்றும் குழு தலைவர் தேர்தல் அதிமுக சார்பாக போட்டியிட உள்ளனர். மாமன்றத்தில் உறுப்பினர்கள் செயல்பாடுகள் பார்த்து பணி நிரந்தரமாக இருக்கும் சரி இல்லாத பட்சத்தில் மாற்று நிர்வாகி தேர்வு செய்யப்படும். மாமன்றத்தில் மதுரை மக்களுக்கு தேவையான குரல் ஒலிக்க வேண்டும், என்று மாமன்ற நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் சிட்டி திட்டம் பணிகள் நடைபெறாமல் இருக்கிறது. அம்ரூட் திட்டம் மூலம் முல்லை பெரியார் அணையில் இருந்து தண்ணீர் கொண்டு வரும் திட்டம் செயல்படாமல் இருக்கின்றது. அதிமுக கொண்டு வந்த திட்டம் என்பதால் திமுக அமைச்சர்கள் குற்றம் கூறுகின்றனர்.

கேரளாவை போல தமிழகத்திலும் பொது பந்த் அறிவித்திருக்க வேண்டும். போக்குவரத்து துறை அமைச்சர் அனைத்து பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். ஆனால், அமைச்சர் துரைமுருகன் தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தத்திற்கு முழு ஆதரவு தருவதாக கூறினார். எனவே, திமுக அரசு இரட்டை வேடம் போடுகிறது.

மேலும், தமிழக முதல்வர் தவறாக எடுத்து கொள்ளமாட்டார் என கூறிய செல்லூர் ராஜூ. முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிவெளிநாட்டு பயணம் செய்தபோது கிண்டல் கேலி செய்தனர், அப்போது 36,000 கோடி திட்டத்தை செயல்படுத்தினார்.

இன்று திமுக முதல்வர் வெளிநாடு சுற்றுப்பயணம் முதலீட்டை ஈர்க்கும் பயணமா?? முதலீடு செய்யும் பயணமா? அவருடன் சென்று இருக்கும் நபர்களை பார்த்தால் இன்ப சுற்றுலா போல தோன்றுகிறது.

முதல்வரின் வெளிநாட்டு முதலீடு குறித்த கேள்விக்கு… இப்போது தான் முதல் இரவு நடக்குது அதுக்குள்ள குழந்தை பற்றி பேசுவது சரியா?

தமிழகத்தில் பாஜக பல்வேறு இடங்களில் தொடர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால், அதிமுக என நடத்துவதில்லையே என செய்தியாளர் கேள்விக்கு, இன்னும் நான்கு வருடங்கள் இருக்கிறது. அதிமுக போராட்டம் நடத்தினால் அது வலுவாக இருக்கும் என கூறிய செல்லூர் ராஜீ ஆங்கிலத்தில் wait and see என்று கூறினார்.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 1304

    0

    0