‘நான் ஆளும்கட்சி காரன்… ஒன்னும் பண்ண முடியாது’
பாதையை ஆக்கிரமித்த திமுக பிரமுகர் ; ஆட்சியரிடம் கிராம மக்கள் பரபரப்பு புகார்..!!

Author: Babu Lakshmanan
12 June 2023, 6:44 pm

பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பாதையை ஆக்கிரமித்த திமுக முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் மீது கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா உட்பட்டது தருமத்துப்பட்டி பெரிய வீதி பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மேலும், இப்பகுதி வழியாக இரு நூறுக்கும் மேற்பட்ட கிராமப்புற மக்கள் சென்று வருகின்றனர்.

இந்நிலையில், இப்பகுதியில் உள்ள சாலையையும், அருகே உள்ள ஊராட்சிக்கு சொந்தமான கிணறையும் திமுகவைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் முருகன் இருவரும் சேர்ந்து பொதுமக்கள் பயன்படுத்தும் பாதையில் மிகப் பெரிய குழியை தோண்டி தங்கள் பயன்படுத்துவதற்காக கடை கட்டி வருவதற்கு தற்போது ஏற்பாடு செய்துள்ளனர்.

எதற்காக பொதுமக்கள் பயன்படுத்தப்படும் சாலையில் கடையை கட்டுகிறீர்கள் என்று கிராம மக்கள் கேட்டதற்கு, ‘நாங்கள் அப்படித்தான் செய்வோம். யாரிடம் வேண்டுமானாலும் புகார் சொல்லுங்கள். யாரும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது. நான் ஆளும் கட்சி. அதனால் யாரும் ஒன்றும் செய்ய முடியாது,’ என்று கூறியதாகக் கூறப்படுகிறது.

இதை அடுத்து நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் ஊர் பொதுமக்கள் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுத்தனர்.

  • High Court Orders Sivaji Ganesan House Auction நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய ஐகோர்ட் உத்தரவு – உண்மையென்ன?