அடிக்கடி வீடியோ கால்… தொடர்ந்து டார்ச்சர் செய்த திமுக பிரமுகர் கைது ; போலீசார் விசாரணை…!!

Author: Babu Lakshmanan
27 April 2023, 4:08 pm

திண்டுக்கல் ; கொடைக்கானலில் வாட்ஸ் ஆப் காலில் பெண்ணை மிரட்டி பணம் கேட்ட திமுக பிரமுகர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அன்னை தெரசா நகரை சேர்ந்த ராஜேஷ்குமார், இவரது மனைவி ரம்யா. ராஜேஷ் குமார் வீட்டிற்கு அருகில் உள்ளவர் வளன். இவர் திமுக பிரமுகர், எதிர் வீட்டில் வசிக்கும் ராஜேஷ் குமார் மனைவி ரம்யாவிடம் வளன் வாட்ஸ் அப் காலில் அடிக்கடி பேசி தொந்தரவு செய்து வந்ததுடன், பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.

இது பற்றி ராஜேஷ் குமாரும் அவரது மனைவி ரம்யாவும் ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கேட்டதற்கு, திமுக பிரமுகர் வளன், கணவன், மனைவி இருவரையும் திட்டியதுடன் அடித்து உள்ளார் .கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி உள்ளார்.

இது பற்றி ராஜேஷ் குமார் கொடுத்த புகாரின் அடிப்படையில் கொடைக்கானல் போலீசார் வழக்கு பதிவு செய்து பெண்ணை வாட்ஸ் அப் காலில் பேசி பணம் கேட்டு மிரட்டிய திமுக பிரமுகர் வளணை கைது செய்தனர்.

  • Keerthy Suresh new glamorous look கவர்ச்சி உடையில் பிரபல நடிகருடன் குத்தாட்டம்…வைரலாகும் கீர்த்தி சுரேஷ் வீடியோ..!
  • Views: - 373

    0

    0