பாஜக நிர்வாகி கொலை வழக்கில் டுவிஸ்ட்.. திமுக ஊராட்சி தலைவர் உட்பட 4 பேர் மீது குண்டாஸ்!
Author: Udayachandran RadhaKrishnan9 January 2025, 12:15 pm
வேலூர் பாஜக நிர்வாகி கொலை வழக்கு, திமுக ஊராட்சி மன்ற தலைவர் உட்பட 4 பேர் மீது பாய்ந்த குண்டாஸ்
இதையும் படியுங்க: மருதமலைக்கு போறீங்களா? பொங்கலை முன்னிட்டு பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் திடீர் கட்டுப்பாடு!
வேலூர் மாவட்ட பா.ஜ.க ஆன்மிகப் பிரிவின் வேலூர் மாவட்டச் செயலாளராகப் பொறுப்பு வகித்துவந்தவர் நாகல் கிராமத்தை சேர்ந்த விட்டல்குமார் (47). இவர் கடந்த 16-ம் தேதி சாலையோரம் விபத்தில் சிக்கியது போல் மீட்கப்பட்ட நிலையில் விசாரணையில் கொலை என்றும் முன்விரோதம் காரணமாக அடித்துப் போட்டுவிட்டு விபத்து போல் செட் செய்து நாடகமாடியதும் தெரியவந்தது.
இக்கொலை தொடர்பாக தி.மு.க-வைச் சேர்ந்த நாகல் ஊராட்சி மன்றத் தலைவரான பாலாசேட், அவரது மகன் தரணிகுமார், கூட்டாளிகள் கமலதாசன், சந்தோஷ் ஆகிய 4 பேரை கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் 4 பேர் மீதும் குண்டர் சட்டத்தில் அடைக்க வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் பரிந்துரையின் பேரில் வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி உத்தரவிட்டுள்ளார்.