வீதியில் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: அத்துமீறிய திமுக பொறுப்பாளர் போக்சோவில் கைது..!!

Author: Rajesh
22 March 2022, 2:02 pm

திருப்பூர்: பல்லடம் அருகே சின்னகரையில் 3 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் திமுகவை சேர்ந்த மேஸ்திரி சிவகுமார் 50 என்பவரை பல்லடம் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சின்னக்கரை பகுதியில் 3 வயது சிறுமி ஒருவர் வீதியில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது, அதே பகுதியில் வசித்து வரும் திமுக பிரமுகரும் கட்டிட மேஸ்திரியுமான சிவகுமார் என்பவர் அச்சிறுமியை வீட்டினுள் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக கூறப்படுகிறது. வீட்டுக்குச் சென்ற சிறுமி இதுகுறித்து தனது பெற்றோரிடம் அழுது கொண்டே நடந்த சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார்.

அதனையடுத்து, சிறுமியின் பெற்றோர் பல்லடம் மகளிர் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் செய்தனர். பல்லடம் மகளிர் போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து திமுக பொறுப்பாளரும் கட்டிட மேஸ்திரியுமான சிவகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பல்லடம் அருகே 3 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் போக்சோ சட்டத்தில் திமுக பிரமுகர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 2063

    0

    0