சொந்த தாய்மாமாவை கூலிப்படையோடு தாக்கிய திமுக நிர்வாகி… காவல்நிலையம் முன்பு நடந்த சம்பவம்.. அதிர்ச்சி சிசிடிவி காட்சி!!
Author: Babu Lakshmanan19 ஜூலை 2023, 4:07 மணி
ஸ்ரீவில்லிபுத்தூர் சொத்து பிரச்சனை காரணமாக சொந்த தாய்மாமாவை கூலிப்படையினருடன் தாக்கிய திமுக நிர்வாகியின் சிசிடிவி காட்சிகள் வைத்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்திற்கு முன்பு நகைக் கடை வைத்து நடத்தி வருபவர் ராஜகோபால் (வயது 74). இவரது மகள் ரேவதி வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நல்லமநாயக்கன்பட்டியைச் சேர்ந்த திமுக மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் ஜெயபிரகாஷ் என்பவர் அவரது சித்தப்பா ராமதாஸின் வாரிசு இல்லாத 25 கோடி ரூபாய் சொத்தை அபகரிக்க முயன்றதாக கூறப்படுகிறது.
ஆனால், வழக்கறிஞர் ரேவதி மற்றும் அவரது தந்தை நீதிமன்றம் மூலம் சொத்துக்கு 13 பேர் வாரிசு உள்ளதாக தெரிவித்த நிலையில், ஆத்திரமடைந்த ஜெயபிரகாஷ், அவரது தம்பியும், திமுக கிளை செயலாளர் பாலாஜி என்பவரும் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்திற்கு முன்பு உள்ள ராஜகோபாலின் நகை கடைக்குள் கூலிப்படைகளுடன் சென்று, ராஜகோபால் என்ற முதியவரை கடுமையாக தாக்கியுள்ளனர்.
பின்னர் முதியவரை வலுக்கட்டாயமாக காரில் ஏற்ற முயன்ற போது முதியவர் தப்பி எதிரே உள்ள காவல் நிலையத்திற்குள் ஓடியுள்ளார். அவரை துரத்தி சென்ற கூலிபடையினரையும், ஜெயபிரகாசத்தையும், அவரது தம்பி பாலாஜியை
காவல் துறையினர் எச்சரிக்க சினிமா பட பாணியில் அங்கிருந்து கூலிப்படையினரும், அவரும் ஓடிவிட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும், முதியவரை தாக்கிய திமுக நிர்வாகிகள் மற்றும் கூலிப்படையினர் மீது நடவடிக்கை எடுக்குமாறு சிசிடிவி காட்சிகளை வைத்து காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், திமுக நிர்வாகிகள் மற்றும் அடையாளம் காட்டக்கூடிய நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு நகர் காவல் துறையினர் தெரிவித்தனர். பின்னர், விசாரணை மேற்கொண்டு தலைமறைவான குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
திமுக நிர்வாகி ஜெயபிரகாஷ் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
0
0