பொதுமக்கள், வியாபாரிகளை அடித்து மிரட்டி பணம் பறிக்கும் திமுக பிரமுகர் ; நடவடிக்கை எடுக்க தயங்கும் போலீசார்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

Author: Babu Lakshmanan
18 August 2022, 7:22 pm

கரூர் : கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளை அடித்து மிரட்டி, மாநகராட்சி ஊழியர் மற்றும் திமுக பிரமுகரும் பணம் பறிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கரூர் மாநகராட்சியில் தண்ணீர் திறந்துவிடும் பணியாளராக வேலை பார்ப்பவர் அசோக். இவமு நண்பரும், குண்டாஸில் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றவருமான சந்தோஷ் என்பவரும் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளை மிரட்டி பணம் பறிப்பதாக புகார் எழுந்துள்ளது.

16வது வார்டு வடக்கு காந்தி கிராமம் சணப்பிரட்டி பகுதியில் உள்ள மருந்துக்கடை ஒன்றில், வியாபாரியை அடித்து மிரட்டி மாமுல் கேட்கும் வீடியோ காட்சிகளும் தற்போது வெளியாகியுள்ளன.

இவர்கள் இருவரும் 16வது வார்டு திமுக கவுன்சிலர் புல்லட் பூபதியின் நெருங்கிய நண்பர்களும், திமுகவை சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது. அப்பகுதியில் இரவில் பொதுமக்கள் நடமாட பயப்படுவதாகவும், திமுக கவுன்சிலர் பூபதிக்கு நெருங்கிய நண்பர்கள் என்பதால், இவர்கள் மீது புகார் அளிக்க பொதுமக்கள் பயப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.

இவர்களின் தாக்குதலில் காயமடைந்த இளைஞர்கள் கரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தால், காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தயக்கம் காட்டுவதாகவும் கூறப்படுகிறது.

எனவே, அராஜகத்தில் ஈடுபடும் இதுபோன்ற நிர்வாகிகள் மீது திமுகவின் மேலிடம் தான் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதியினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!