நர்சிங் மாணவி மர்ம மரணம் : திமுக நிர்வாகியை கைக் காட்டும் அண்ணாமலை!

Author: Udayachandran RadhaKrishnan
28 December 2024, 8:01 pm

புதுக்கோட்டையில் நர்சிங் மாணவி கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் திமுக நிர்வாகியின் உறவினரை கைது செய்ய காவல்துறை தயங்குகிறது என அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

Pudukkottai Nursing Student Death Case

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள X தளப்பதிவில், புதுக்கோட்டை மாவட்டம் கருக்காகுறிச்சி வடக்கு கிராமத்தைச் சேர்ந்த, அரசு மருத்துவக் கல்லூரியில் நர்சிங் பயின்று வரும் மாணவி, வீட்டிலிருந்து காணாமல் போன நிலையில், அருகிலுள்ள கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

இதையும் படியுங்க: CM ஸ்டாலின் போஸ்டர் மீது செருப்பு வீசிய மூதாட்டியை படம்பிடித்த இளைஞர் கைது.. டிடிவி கண்டனம்!

மாணவியின் பெற்றோர்கள், மணிகண்டன் என்பவர் மீது சந்தேகம் இருப்பதாகக் கூறி, குற்றவாளிகளைக் கைது செய்யும் வரை, மாணவியின் உடலை வாங்க மறுத்து, போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த மணிகண்டன் என்ற நபர், புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி திமுக ஒன்றிய செயலாளர் தவ பாஞ்சாலன் என்பவரின் உறவினர் என்பதால், காவல்துறைக்கு அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று அழுத்தம் கொடுப்பதாகத் தெரிகிறது.

Annamalai Demand To Arrest DMK Executive In Pudukkottai Nursing Student Death Case

காவல்துறை எந்தவித அழுத்தங்களுக்கும் அடிபணியாமல், உண்மைக் குற்றவாளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

  • Sikandar movie teaser release ஏ.ஆர்.முருகதாஸின் தரமான சம்பவம் LOADING…மிரட்டலாக வெளிவந்த சல்மான் கானின்”சிக்கந்தர்”பட டீஸர்..!
  • Views: - 62

    0

    0

    Leave a Reply