முதலமைச்சர் ஸ்டாலின் குறித்து அவதூறு… அண்ணாமலை மீது போலீஸில் திமுக நிர்வாகி புகார்…!!

Author: Babu Lakshmanan
14 June 2022, 5:53 pm

கோவை : தமிழக முதலமைச்சர் குறித்து அவதூறு பரப்பும் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க கோவை பந்தய சாலை போலீசில் திமுக நிர்வாகி புகார் அளித்துள்ளார்.

கோவையில் உள்ள ரேஸ்கோர்ஸ் ரகுநாத் என்ற திமுகவை சேர்ந்த பட தயாரிப்பாளர் கோவை பந்தய சாலை காவல் நிலையத்தில் கடந்த 9ஆம் தேதி பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரில் பாஜக மாநில தலைவர் ஆகிய அண்ணாமலை, தான் அரசியல் செய்வதற்காக தமிழக முதல்வரைப் பற்றி பல மேடைகளிலும் பல பொது இடங்களிலும் முன்னுக்குப்பின் தவறான செய்திகளை பகிர்ந்து வருகிறார். மேலும் தமிழக அமைச்சரவையில் உள்ள சில அமைச்சர்களையும் ஊழல்வாதியாக சித்தரித்து பேசி வருகிறார். இவருடைய கருத்து பொது மக்களுக்கும் குறிப்பாக தமிழக மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மிகப்பெரிய கட்சித் தலைவராக உள்ள இவர், பத்திரிக்கை மற்றும் ஊடகங்களில் தவறாக பேசி வருவதை தடை செய்து உத்தரவிட வேண்டும் எனவும், இவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுத்து கைது செய்யுமாறும் பந்தய சாலை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் தெரிவித்துள்ளார்.

இவர் அளித்த புகாரில் பந்தய சாலை போலீசார் புகார் மனு ஏற்பு சான்றிதழ் (சி.எஸ்.ஆர்) வழங்கியுள்ளனர்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!