விபத்தில் சிக்கி திமுக நிர்வாகி பலி.. சாலையை கடந்தவர் மீது மோதுவதை தவிர்க்க முயன்ற போது சோகம்!

Author: Udayachandran RadhaKrishnan
18 August 2024, 11:20 am

கோவை ஆலந்துறை பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார். பேரூராட்சியில் 1- வது வார்டு தி.மு.க செயலாளராக இருக்கும் இவர். வெங்காய வியாபாரம் செய்து வருகிறார்.
வழக்கம் போல் வெங்காயம் வியாபாரத்திற்காக கோவை மாநகரப் பகுதிக்கு சென்று விட்டு வீட்டிற்கு செல்ல தனது இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டு இருக்கும் போது உரிப்பள்ளம்புதூர் அருகே ஒருவர் திடீரென சிறுவாணி சாலையை கடக்க முயன்றார்.

அவர் மீது மோதாமல் இருக்க இருசக்கர வாகனத்தை இடது புறமாக திருப்பம் முயன்றதில் அவர் மீது இடது காலில் மோதி சாலையின் ஓரத்தில் இருந்த கான்கிரீட் பாலத்தின் மீது மோதிய விபத்தில் வாகனத்தை ஓட்டி வந்த செந்தில்குமாரின் தலை, கழுத்து பகுதியில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சாலையைக் கடக்க முயன்றவர் மயக்க அடைந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ஆலாந்துறை காவல் துறையினர் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றன.

  • IT raids Dil Raju and Naveen Yerneni Places விஜய், அஜித் பட தயாரிப்பாளர்கள் இடங்களில் ஐடி ரெய்டு.. பரபரப்பில் டோலிவுட்!