ஆடுகளை விஷம் வைத்து கொன்ற மர்ம நபர்கள்… விரக்தியில் திமுக நிர்வாகி.. மாவட்ட ஆட்சியருக்கு மனுவுடன் அல்வா கொடுத்த சம்பவம்!!

Author: Babu Lakshmanan
21 November 2022, 12:51 pm

ஆடுகளை விஷம் வைத்து கொன்ற மர்ம நபர்கள் குறித்து 3 ஆண்டுகளுக்கு மேலாக விசாரணை நடத்தப்படாததை கண்டித்து மாவட்ட ஆட்சியருக்கு திமுக நிர்வாகி அல்வாவோடு சேர்த்து மனு கொடுத்துள்ளார்.

கோவை வேடப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஜெகநாதன். கடந்த 2019ஆம் ஆண்டு இவருக்கு சொந்தமான ஆட்டுப்பண்ணையில் 5 ஆடுகளை மர்ம நபர்கள் விஷம் வைத்து கொன்றதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதேபோல, அந்த மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பலமுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

இதுவரை தன்னுடைய ஆட்டை கொன்ற அதிமுகவை சேர்ந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அல்வாவுடன் வந்து மீண்டும் மனு ஒன்றை அளித்தார்.

இது குறித்து ஜெகநாதன் கூறுகையில், “கடந்த மூன்று ஆண்டுகளாக ஆடுகளை விஷம் வைத்து கொன்ற நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் காவல்துறையினரும், ஆட்சியரும் தனக்கு அல்வா கொடுத்து வருகின்றனர். எனவே, அவர்களுக்கே மீண்டும் தான் அல்வாவுடன் சேர்த்து மனு கொடுக்கிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார். ஜெகநாதன் திமுக நிர்வாகி என்பது குறிப்பிடத்தக்கது.

  • ajith kumar next movie directed by sukumar அய்யோ; இது சுத்த பொய்- பதறிப்போய் ஓடி வந்த அஜித்தின் மேனேஜர்? அப்படி என்ன நடந்திருக்கும்?