பாஜகவுக்கு தாவிய திமுக நிர்வாகி.. காரில் இருந்து திமுக கொடியை அகற்றி பாஜக கொடியை வைத்த அண்ணாமலை!

Author: Udayachandran RadhaKrishnan
27 March 2024, 11:16 am

பாஜகவுக்கு தாவிய திமுக நிர்வாகி.. காரில் இருந்து திமுக கொடியை அகற்றி பாஜக கொடியை வைத்த அண்ணாமலை!

கோவை மாவட்டம் சூலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கண்ணம்பாளையம் பேரூராட்சியில் துணைத் தலைவராக இருந்து வருபவர் சண்முகம்.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக நடைபெற்ற பேரூராட்சி தேர்தலில் வெற்றி பெற்று துணைத் தலைவராக இருந்து வருகிறார். இங்கு தலைவராக திமுக கட்சியைச் சேர்ந்த பெண் தலைவர் இருந்து வருகிறார். திமுக தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசனின் தம்பியின் மனைவி ஆவார்.

இந்நிலையில் துணைத் தலைவராக சண்முகம் பதவி ஏற்ற நாளிலிருந்து பேரூராட்சி தலைவருக்கு துணைத் தலைவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது.

இது தொடர்பாக திமுக மேலிடத்திற்கு பலமுறை தகவல் கொடுத்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் கட்சியிலிருந்து கட்சியில் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக திமுகவில் இருந்து பிரிந்து நிர்வாகிகள் கூட்டத்திற்கு வந்திருந்த அண்ணாமலை முன்பாக கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.

முன்னதாக துணைத் தலைவர் சண்முகம் வீட்டிற்கு வருகை தந்த அண்ணாமலை துணைத் தலைவர் சண்முகத்திற்கு சால்வை அணிவித்து வரவேற்றார்,.

பின்னர் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டதால் அவரது காரில் இருக்கும் கட்சிக்கொடி அகற்றி பாஜக கட்சி கொடியை கட்டுமாறு அண்ணாமலை இடம் துணைத்தலைவர் பணித்துள்ளார்.

உடனடியாக அதை ஏற்றுக்கொண்ட அண்ணாமலை காரில் இருந்த கொடியை அகற்றி பாஜக கொடியை காரில் கட்டினார்.

  • Vikraman wife press meet அது ‘அதற்காக’ எடுக்கப்பட்ட வீடியோ.. விக்ரமன் மனைவி பரபரப்பு பேட்டி!