சினிமாவை மிஞ்சிய கொலை… காரில் வந்த திமுக பிரமுகர் நாட்டு வெடிகுண்டு வீசி வெட்டிக்கொலை… வண்டலூரில் அதிர்ச்சி சம்பவம்..!!
Author: Babu Lakshmanan1 March 2024, 11:06 am
வண்டலூரில் திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் ஆராமுதன் மீது நாட்டு வெடிகுண்டு வீசி மர்ம நபர்கள் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் திமுக வடக்கு ஒன்றிய செயலாளராக இருந்து வருபவர் ஆராமுதன். இவர் வண்டலூர் மேம்பாலம் கீழ்பகுதியில் கட்சி அலுவலகம் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், வண்டலூர் மேம்பாலம் அருகே புதிதாக பேருந்து நிலையம் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளன. இந்த புதிய பேருந்து நிலையத்தை பார்ப்பதற்காக தனது காரில் ஆராமுதன் வந்தபோது, அங்கு மறைந்திருந்த மர்ம நபர்கள் திடீரென நாட்டு வெடிக்கண்டுகளை காரின் மீது தூக்கி வீசி உள்ளனர்.
மேலும், தலை,கை, கால் என பல்வேறு பகுதிகளில் வெட்டியதில் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடியுள்ளார். இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் அவரை மீட்டு குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் இதையடுத்து தகவல் அறிந்து சென்ற ஓட்டேரி போலீசார் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுகாக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
குரோம்பேட்டை மருத்துவமனையில் அவரது உறவினர்கள்,திமுகவினர் குவிந்து வருவதால் பதற்றம் நிலவி வருகிறது. இதனால் பாதுகாப்புகாக குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். திமுக பிரமுகரை மர்ம கும்பல் நாட்டு வெடி வீசி சம்பவம் வண்டலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுக நிர்வாகியை வெட்டிக் கொலை செய்த கும்பலை பிடிக்க 2 உதவி ஆணையர்கள் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.