திமுக நிர்வாகி அரிவாளால் வெட்டிக் கொடூரக்கொலை… பைக்கில் வந்த மர்ம நபர்கள் வெறிச்செயல்.. திண்டுக்கல்லை உலுக்கிய சம்பவம்..!!

Author: Babu Lakshmanan
20 July 2023, 9:30 pm

திண்டுக்கல் ; திண்டுக்கல் அண்ணா நகரில் பிரபல ரவுடி பட்டறை சரவணன் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல் குமரன் திருநகரை சேர்ந்தவர் சரவணன். இவரது தந்தை இரும்பு பட்டறை வைத்துள்ளார். இவர் பட்டறையில் இருப்பதால் இவருக்கு அடைமொழியாக பட்டறை சரவணன் என நண்பர்களால் அழைக்கப்பட்டு வந்தார். இவர், தற்போது திண்டுக்கல் திமுக மாநகர கிழக்கு பகுதி மாணவரணி துணை அமைப்பாளராக இருந்து வருகிறார்.

இவர் மீது கொலை, ஆள் கடத்தல், அடிதடி என 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் இன்று இரவு திண்டுக்கல் அண்ணாநகர் தைல தோப்பில் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார்.

அப்பொழுது, அங்கு காரில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், பட்டறை சரவணனை கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களால் கழுத்து, தலை, மற்றும் உடம்பில் பல இடங்களில் வெட்டியுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே சரவணன் பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய போலீசார் சரவணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • Madha Gaja raja massive hits and breaks in Blockbuster office பிளாக்பஸ்டர் ஹிட்டான மதகஜராஜா.. 10 நாளில் பட்டையை கிளப்பிய வசூல்..!!