திமுக பிரமுகர் மீது நாட்டு வெடிகுண்டு வீசி கண்டம்துண்டமாக வெட்டிப் படுகொலை : அரசியல் புள்ளிக்கு தொடர்புள்ளதாக உறவினர்கள் புகார்!

Author: Udayachandran RadhaKrishnan
6 August 2023, 1:16 pm

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளியும் எச்சூர் ஊராட்சியின் திமுக கட்சியைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் டோமினிக் அவரின் மகனும், திமுக கட்சியின் உறுப்பினருமான ஆல்பர்ட் (வயது‌ 25) என்ற இளைஞர் நேற்று எச்சூர் பகுதியிலுள்ள NASH கம்பெனி அருகே தனது நண்பர்கள் நால்வருடன் நின்று பேசிக் கொண்டிருந்தார் .

அப்போது அங்கு மூன்று இரு சக்கர வாகனங்களில் வந்த மர்ம நபர்கள் 2 நாட்டு வெடிகுண்டுகளை ஆல்பர்ட் மீது வீசி சரமாரியாக வீசி முகம் மற்றும் தலைப்பகுதியில் அருவாளால் வெட்டி கொலை செய்து அங்கிருந்து தப்பித்துச் சென்றனர்.

உடனே அவரது நண்பர்கள் ஆல்பர்ட்டின் வாகனமான வேல்ஸ்கான் காரிலேயே ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே ஆல்பர்ட் இறந்து விட்டதாக தெரிவித்துனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சென்ற சுங்குவார்சத்திரம் காவல்துறையினர் ஆல்பத்தின் பிரேதத்தை மீட்டு ஸ்ரீ பெரும்புதூர் அரசு மருத்துவ சவக்கிடங்கில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

சடலத்தை ஸ்ரீபெரும்புதூர் பிரேத பரிசோதனை அறையில் வைத்தால் பிரச்சனை ஏற்படும் என்ற காரணத்திற்காக ஆல்பர்ட் உடலை செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

திமுக கட்சியைச் சேர்ந்த ஆல்பர்ட் மீது 15 க்கும் மேற்பட்ட அடிதடி கொலை முயற்சி போன்ற வழக்குகள் உள்ளதாக காவல்துறை சார்பில் கூறப்படுகிறது. மேலும் திமுக கட்சியை சார்ந்த ஸ்ரீபெரும்புதூர் பெருந்தலைவர் கருணாநிதிக்கும் (MBC) ஆல்பர்ட் க்கும் இடையே வார் நடப்பதாகவும் அதனால்தான் ஆல்பர்ட் (SC) வெட்டி படுகொலை செய்திருக்கலாம் எனவும் ஆல்பர்ட் தரப்பில் கூறப்படுகிறது.

சுங்குவார்சத்திரம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றார்கள் . அதே போல் ஸ்ரீபெரும்புதூர் டிஎஸ்பி தலைமையில் ஒரு தனிப்படை மும், காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் தலைமையில் ஒரு தனிப்படையும் சுங்குவார்சத்திரம் காவல் ஆய்வாளர் கார்த்திக் தலைமையில் ஒரு தனிப்படையும் என மூன்று தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை வலை வீசி தேடி வருகிறார்கள்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி