இந்த வேலை எல்லாம் இங்க வேணாம்… கலைஞர் காலத்திலேயே பார்த்துட்டோம்… எதுக்கும் அஞ்ச மாட்டோம் ; ஆர்எஸ் பாரதி பரபர பேச்சு..!!

Author: Babu Lakshmanan
6 June 2023, 9:19 am

எந்த ரெய்டுக்கும் நாங்கள் அஞ்சப் போவதில்லை என்று பம்மலில் நடந்த கூட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதி தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் பம்மல் தெற்கு பகுதி திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, அப்பகுதியின் செயலாளரும், மண்டல குழு தலைவருமான வே. கருணாநிதி தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், தமிழக சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோஅன்பரசன் திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

அப்போது, அவர் பேசியதாவது :- திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதி ரைடுகள் எல்லாம் திமுக கலைஞர் காலத்திலேயே சந்தித்துள்ளது. எந்த ரெய்டுகளுக்கும் அஞ்ச மாட்டோம். ராஜாஜி காலத்தில் எங்களுக்கு ரெய்டு ஆகிறது. கலைஞர் அமைதியாக உட்கார்ந்து இருக்கிறார். கலைஞரின் துணைவியார் ராஜாத்தி அம்மாளை நிர்வாணமாக்கி சோதனை செய்தார்கள். வேறு யாராக இருந்தாலும் மிகவும் பதறி இருப்பார்கள்.

ஆனால், கலைஞர் வாங்க முரசொலி அலுவலகத்திற்கு செல்லலாம் என அதை மிகவும் எளிதாக எடுத்துக்கொண்டு முரசொலியில் எழுதினாரே தவிர, அதை கண்டு கலங்கவில்லை. கலைஞர் கலங்கினால் கட்சியில் உள்ள அனைத்து தொண்டனும் சோர்வடைந்து விடுவான் என எண்ணி அவர் கலங்கவில்லை, என்றார்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி