‘வேற யார்கிட்டயாவது வச்சுக்கோ தொலைச்சுப்புடுவேன்’… அரசு அதிகாரியை அசிங்கமாக திட்டிய திமுக ஒன்றிய செயலாளர்… அதிர்ச்சி வீடியோ!!

Author: Babu Lakshmanan
14 March 2023, 2:11 pm

சாயல்குடி ஒன்றிய திமுக செயலாளர் ஜெயபால், அரசு அதிகாரிகளை ஒருமையில் பேசி தொலைக்காட்சியில் பேட்டியளித்த கடலாடி துணை சேர்மன் ஆத்தி உள்ளிட்டோரை அவதூறாக பேசி மிரட்டிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாயல்குடி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் ஜெயபாலன் கடலாடி வட்டார வளர்ச்சி அலுவரை அநாகரீகமான வார்த்தையில் பேசும் வீடியோ வெளியாகி அரசு ஊழியர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியதுடன், தொடர்ந்து அவர்மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சாயல்குடி அருகே உள்ள பொன்னகரம் அரசுப்பள்ளியில் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ள பள்ளி கட்டிடத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும் எனவும், 1 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டில் பராமரிப்பு பணிகளை ஒப்பந்தம் எடுத்ததாக சொல்லப்படும் சாயல்குடி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் ஜெயபாலன் பணிகளை செய்யவில்லை என கடலாடி ஊராட்சி ஒன்றிய துணைப் பெருந்தலைவர் ஆத்தி கடந்த வாரம் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கொடுத்த பேட்டியில் குற்றம்சாட்டினார். மேலும், அந்தப் பராமரிப்பு பணிகளை உடனடியாக தமிழக அரசு துரிதப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில், கடலாடி ஊராட்சி ஒன்றிய துணைப் பெருந்தலைர் ஆத்தியின் அலுவலகத்திற்கு சென்ற சாயல்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெயபாலன், தனது அடியாட்களுடன் மிரட்டியதுடன் வட்டார வளர்ச்சி அலுவலரை அநாகரீகமான வார்த்தையில் ஒருமையில் பேசிய வீடியோ வெளியானதால் அரசு ஊழியர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்