உதவி கேட்டுச் சென்ற பெண்ணுக்கு திமுக பிரமுகர் செக்ஸ் டார்ச்சர் : நான் திமுக காரன்.. உன்னால ஒன்னும் பண்ண முடியாது என மிரட்டல்!!!

Author: Babu Lakshmanan
13 October 2023, 4:51 pm

உதவி கேட்டுச் சென்ற பெண்ணுக்கு திமுக பிரமுகர் செக்ஸ் டார்ச்சர் : நான் திமுக காரன்.. உன்னால ஒன்னும் பண்ண முடியாது என மிரட்டல்!!!

கணவனை இழந்த பெண்ணிற்கு செல்போனில் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக திமுக பிரமுகர் மீது ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் கஸ்தூரி நகரைச் சேர்ந்தவர் ரோஜா (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). இவருக்கு திருமணமாகி மாற்றுத்திறனாளி மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவருடைய கணவர் இறந்து 11 வருடங்கள் ஆன நிலையில், இவர் கூலி வேலை செய்து, தன் இரண்டு குழந்தைகளையும் காப்பாற்றி வருகிறார்.

இந்நிலையில், அதே பகுதியான காந்தி நகரைச் சேர்ந்த திமுக பிரமுகரான பிரபு என்ற இளைஞரிடம் ரோஜா, தனது மாற்றுத்திறனாளி பையனுக்கு, ஏதாவது மிதிவண்டி அல்லது ஏதாவது உதவி செய்து தரும்படி கேட்டுள்ளார். அதன் அடிப்படையில், சரோஜாவின் செல்போன் நம்பரை பெற்றுக் கொண்ட பிரபு, அவருக்கு தொடர்ந்து செல்போனில் அடிக்கடி செக்ஸ் தொந்தரவு செய்து வந்துள்ளார்.

அதன்பின், ரோஜா அவரது செல்போன் நம்பரை பிளாக் லிஸ்டில் போட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து பிரபு, கடந்த சில தினங்களாக வீடியோ காலில் தொடர்பு கொள்வதும், பேசுவதும், வாட்ஸ் ஆப்பில் ஆபாச படங்களை அனுப்புவதும், ஆபாசமான வார்த்தைகளில் பேசுவதும், அவரது ஆபாச புகைப்படங்களை அனுப்புவதும் என தொடர்ந்து அவருக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்து வந்துள்ளார்.

மேலும், ‘நான் திமுக பிரமுகர் என்றும், என்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்றும், அதனால் நீ என் ஆசைக்கு இனங்கும் படியும், அப்படி இனங்காவிட்டால் உன்னை கொன்று விடுவேன் என்றும், உன் பிள்ளைகள் அனாதையாகிவிடும் என்றும் மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனால் பயந்து போன ரோஜா ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் எனக்கும் எனது குழந்தைகளுக்கும் பாதுகாப்பு வேண்டியும், தனக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு தரக்கூடிய பிரபு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

  • Keerthy Suresh new glamorous look கவர்ச்சி உடையில் பிரபல நடிகருடன் குத்தாட்டம்…வைரலாகும் கீர்த்தி சுரேஷ் வீடியோ..!
  • Views: - 586

    0

    1