கடனை திருப்பி கேட்ட வங்கி.. விவசாய கடனை செலுத்த முடியாத திமுக நிர்வாகி விபரீத முடிவு!
Author: Udayachandran RadhaKrishnan15 March 2025, 6:09 pm
திருவள்ளூர் மாவட்டம் வேலூர் ஊராட்சியில் வசித்து வருபவர் முத்துராஜ். 60 வயதான இவருக்கு சுசீலா என்ற மனைவியும், நான்கு மகன்கள் ஒரு பெண் பிள்ளை இருக்கின்றனர்.
முத்துராஜ் திமுகவின் வேலூர் ஊராட்சியில் கிளை கழக செயலாளராக இருக்கிறார். மேலும் முத்துராஜ் ஒரு விவசாயி சொந்தமாக நான்கு ஏக்கர் நிலம் இருந்தும் அதில் விவசாயம் செய்ய இயலாது. காரணம் தண்ணீர் வசதி இல்லை.
இதையும் படியுங்க: வரும் 2026 தேர்தலில் திமுகவின் தேர்தல் அறிக்கைதான் தமிழக பட்ஜெட் : ஹெச் ராஜா கிண்டல்!
இந்த நிலையில் பொன்னேரிக்கு அருகே உள்ள கூடுவாஞ்சேரி கிராமத்தில் ஆறு ஏக்கர் நிலத்தை குத்தகை எடுத்து அதில் விவசாயம் செய்து வந்தார். மேலும் விவசாயத்திற்காக வங்கியில் 5 லட்சம் ரூபாய் கடன் பெற்றதாக தெரிகிறது.
அது மட்டுமல்லாது குத்தகை எடுத்த நிலத்தில் கடந்த முறை நெற்பயிர் பயிரிட்டுள்ளார். அது மழையின் காரணமாக நீரில் மூழ்கியதால் முழுவதும் நஷ்டம் ஏற்பட்டடுள்ளது.

தற்பொழுது அதில் தர்பூசணி பழத்தை பயிரிட்டு வளர்த்து வரும் நிலையில் கடனை திருப்பி செலுத்த முடியாமல் மிகுந்த சிரமம் அடைந்துள்ளார். அது மட்டுமல்லாது வங்கியை சேர்ந்தவர்கள் இவரை தொந்தரவு செய்ததால் கடந்த ஒரு வாரமாக மன உளைச்சலில் இருந்ததாகவும் நேற்று இரவு 12 மணி அளவில் வீட்டில் உள்ள குளியலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் அதை பார்த்த அவரின் மனைவி சுசிலா மற்றும் மகன்கள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட முத்துராஜன் உடலை கைப்பற்றினர்.

இந்த சம்பவம் போலீசாருக்கு தெரிந்ததால் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வங்கியில் வாங்கிய விவசாய கடனுக்காக விவசாயி தற்கொலை செய்து கொண்டது கடந்த காலங்களில் கொஞ்சம் குறைந்து இருந்த நிலையில் தற்போது மீண்டும் விவசாயி கடன் தொல்லைக்காக தற்கொலை செய்து கொண்டது இந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
