கலைஞர் ஆட்சியிலே மூட்டை மூட்டையா தூக்குவோம்.. நீ என்ன ம* பு** சேல்ஸ்மேன் ; ரேஷன் கடை பெண் ஊழியரை திட்டிய திமுக பிரமுகர்..!

Author: Babu Lakshmanan
21 April 2023, 2:19 pm

கலைஞர் ஆட்சியில் ரேஷன் கடையில் மூட்டை மூட்டையாகவும், பெட்டி பெட்டியாக அரிசி, பருப்புகளை தூக்குவோம் என்று திமுக நிர்வாகி பகிரங்க கூறும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா டிடி 487 திண்டுக்கல் மாவட்ட நுகர்வோர் மொத்த விற்பனை பண்டக சாலையில் சேல்ஸ் மேலாளராக பணியாற்றுபவர் மேனகா (32). இந்த நுகர்வோர் பண்டகால சாலையில் மொத்தம் 1233 ரேஷன் கார்டுகள் உள்ளது. சந்தைப்பேட்டை, நேருஜி நகர், வசந்தா நகர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் இங்கு பொருள்களை வாங்குவது வழக்கம்.

மேனகா நேற்று தனது பணியை செய்து கொண்டிருந்தபோது, திமுக அவைத்தலைவர் அமீர் பாட்ஷா என்பவர் மேனகாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

“உன்னால் முடிந்ததை பார். தற்போது இருப்பவர் சின்ன தலைவர். நாங்கள் பெரிய தலைவர் கலைஞர் இருந்தபோது, மூட்டை மூட்டையாகவும், பெட்டி பெட்டியாக அரிசி, பருப்புகளை, அப்போது இருந்த நகர தலைவர் அன்வரை வைத்து தூக்கிச் சென்றோம். நானும் பெட்டி பெட்டியாக வீட்டுக்கு தூக்கிச் சென்றேன், என்று பகிரங்க வாக்குமூலம் அளித்தார்.

ரெண்டு பாக்கெட் எண்ணெய் இல்லை என்று சொல்கிறாய். நீ என்ன மயிரை புடுங்குற சேல்ஸ்மேன்,” என்று அரசு அதிகாரியை ஒருமையில் பேசியும் எச்சரித்தார்.

பெண் விற்பனையாளரை பார்த்து நீ ஒன்னாம் நம்பர் நாடகம், மனோகர் இரண்டாம் நம்பர் நாடகம் என்றும், என்னிடம் விளையாட்டுத்தனமாக விளையாட வேண்டாம், விபரீதம் ஆகிவிடும் என்றும் எச்சரித்து பேசினார்.

இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலான நிலையில், திமுக ஆட்சியில் அரசு அதிகாரிகள் பயந்து பயந்து வேலை பார்ப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.

https://player.vimeo.com/video/819782365?h=2f5a3ac2e4&badge=0&autopause=0&player_id=0&app_id=58479
  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!