திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அடுத்த சிவன்மலை குருகத்தி பகுதியை சேர்ந்தவர் திமுகவை சேர்ந்த கந்து வட்டி கஜேந்திரன் என்கிற சாமிநாதன் (வயது 55). இவர் கந்து வட்டிக்கு பணம் கொடுத்து மீட்டர் வட்டியை தாண்டி ஜெட் வட்டியை தாண்டி ராக்கெட் வட்டி வாங்கி தொழில் செய்து வந்துள்ளார்.
இவ்வாறு கொடுக்கும் பணத்திற்கு வட்டிக்கு மேல் வட்டி போட்டு ராக்கெட் வட்டி விகிதத்தில் கடன் வாங்கியவர்களிடம் இருந்து பல கோடி மதிப்புள்ள பத்திரங்களை எழுதி வாங்கி நூதன மோசடியில் ஈடுப்பட்டுள்ளார்.
இதையும் படியுங்க : தைரியம் இருந்தால் 2026 தேர்தலில் திமுக தனித்து நிற்குமா? முன்னாள் அமைச்சர் சவால்!
சிவன்மலையில் வசித்து வரும் பல குடும்பத்தினர் கந்துவட்டி கஜேந்திரனிடம் பணம் பெற்றதாகவும், இதனை வசூலிக்க கஜேந்திரன் மிகவும் மோசமாகவும் கீழ் தரமாகவும் நடந்து கொண்டதாகவும், இவ்வாறு பணம் பெற்றவர்களிடம் வசூலிக்கும் பணத்தை கொடுத்த பணத்தை அசலில் கழிக்காமல் வட்டியில் கழிப்பதாகவும் இதற்காக கடன் பெற்றவர்களை மிரட்டி பத்திரங்களை எழுதியும் வாங்கியுள்ளார்.
சிவன்மலையை சேர்ந்த செல்வராஜின் தந்தை பாண்டி உடல்நிலை சரியில்லாமல் சக்கரையின் அளவு அதிகமாகி ஒரு கால் அகற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில் செல்வராஜ் (வயது 32) என்பவர் அவரின் தந்தை பாண்டி கந்துவட்டி கஜேந்திரனிடம் பெற்ற ரூ. 8 லட்சம் கடனுக்கு அசலும் வட்டியும் சேர்த்து ரூ. 50 லட்சம் கொடுத்தும் பத்தவில்லை மீண்டும் ரூ.50 லட்சம் கேட்டும் கொடுக்கவில்லை எனவும், இதற்காக செல்வராஜின் வீடு, நிலம், ஆகியவற்றை மிரட்டி எழுதி வாங்கிக் கொண்டதாகவும்,பணத்தை கொடுத்துவிட்டு பத்திரத்தை வாங்கிக்கொள்ளுமாறு தகாத வார்த்தைகள் பேசி , பணம் இல்லாமல் பத்திரம் கிடையாது என கொலை மிரட்டலும் விடுத்ததாக செல்வராஜ் போலீசில் புகார் அளித்துள்ளார்.
இதனை தொடர்ந்து காங்கேயம் துணை கண்காணிப்பாளர் மாயவன் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் மற்றும் போலீசார் சம்பந்தப்பட்ட திமுக நிர்வாகி கந்துவட்டி கஜேந்திரன் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.
இதில் கஜேந்திரன் வீட்டில் இருந்து 73 நிலம், வீடு, தொழில் சார்ந்த பத்திரங்கள், 6 பணம் குறிப்பிடாத வங்கி காசோலை, ஆதிதிராவிடருக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டு மனை பட்டாக்கள், வாகன உரிமம் புத்தகம் ஆகியவற்றை அதிரடியாக கைப்பற்றி உள்ளனர்.
இதன் மதிப்பு சுமார் ரூ.10 கோடி இருக்கும் என தெரிவிக்கின்றனர்.மேலும் திமுக நிர்வாகி கந்துவட்டி கஜேந்திரன் இந்த வீடு மட்டும் இல்லாமல் வேறு பகுதி வீடுகள் எடுத்து பாத்திரங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்கின்றனர்.
இவருக்கு யார் யார் எல்லாம் கூட்டாளிகள் தற்போது எங்கு தலைமறைவாக உள்ளார் என்ற கோணத்தில் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனை தொடர்ந்து தலைமறைவாக உள்ள திமுக நிர்வாகி கந்துவட்டி கஜேந்திரன் மீது பல்வேறு சட்ட பிரிவின் கீழ் வழக்குகள் பதியப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.