வாடகை வீட்டை சொந்தமாக்க திமுக பிரமுகர்… ரூ.3 கோடி மதிப்பிலான வீட்டை ரூ.25 லட்சத்துக்கு கேட்டு மிரட்டல் ; ஆட்சியரிடம் பரபரப்பு புகார்..!!

Author: Babu Lakshmanan
23 November 2023, 1:48 pm

தூத்துக்குடியில் வாடகைக்கு கூடி பெயர்ந்த வீட்டை, திமுக ஒன்றிய செயலாளர் ஆக்கிரமிக்க முயற்சிப்பதாக வீட்டின் உரிமையாளர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.

தூத்துக்குடி, கந்தன் காலனி இரண்டாவது தெருவை சேர்ந்தவர் சாமி (70), சென்னையில் வசித்து வரும் நேசம் என்பவர் தூத்துக்குடி ஆசிரியர் காலனியில் வீடு ஒன்றை சாமியின் பொறுப்பில் விட்டுள்ளார். 2015 ஆம் ஆண்டு ஒட்டப்பிடாரம் அருகே உள்ள முப்பிலிவெட்டி பகுதியை சேர்ந்த இளையராஜா என்பவர் ஒட்டப்பிடாரம் திமுக ஒன்றிய தலைவர் மற்றும் அப்பகுதி பஞ்சாயத்து தலைவராகவும் உள்ளார்.

இவருக்கு சாமி வீட்டை வாடகைக்கு கொடுத்துள்ளார். மாத வாடகை 22,000 ஆகும். அட்வான்ஸ் ஒரு லட்சம் கொடுத்திருந்தார். இந்த ஒப்பந்தம் இரண்டு வருடத்திற்கு முன்பே முடிந்து விட்டது. ஆகவே, வீட்டை காலி செய்ய நேசம் கூறியுள்ளார். ஆனால் இன்று வரை வாடகையும் தரவில்லை. வீட்டை காலி செய்யவும் மறுக்கிறார் இளையராஜா.

தற்போது இளையராஜா 3 கோடி மதிப்புள்ள இந்த வீட்டை 25 லட்சத்திற்கு கொடுக்கும்படி மிரட்டி வருகிறார். ஆகவே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வீட்டை மீட்டு தருமாறு சாமி மனு அளித்துள்ளார்.

  • Udit Narayan viral kiss video ரசிகைக்கு LIVE முத்தம்…மேடையில் பிரபல பாடகரின் லீலை…வைரலாகும் வீடியோ..!