கஞ்சா கடத்தி விற்பனை செய்த திமுக நிர்வாகி… மோப்பம் பிடித்த போலீசார் : திருவாரூரில் அதிர்ச்சி சம்பவம்!

Author: Udayachandran RadhaKrishnan
18 November 2023, 9:46 am

கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட திமுக நிர்வாகி… கருணாநிதி பிறந்த ஊரில் அதிர்ச்சி சம்பவம்!!!

திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயகுமார் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா குட்கா உள்ளிட்ட பொருட்களை பதுக்கி வைத்து சட்ட விரோத விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்தநிலையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பதுக்கி வைத்து சட்ட விரோத விற்பனையில் ஈடுபட்டு வந்த மன்னார்குடி தெப்பகுளம் பகுதியை சேர்ந்த திமுக நகர்மன்ற உறுப்பினர் சங்கர் என்கிற சிவசங்கர் ( 40 ) தஞ்சை மாவட்டம் ஆவிக்கோட்டை கிராமத்தை சேர்ந்த சேகர் ( 40 ) ஆகிய இருவரையும் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அஸ்வத் ஆண்டோ ஆரோக்கிய ராஜ் ஆய்வாளர் ராஜேஷ் கண்ணன் ஆகியோர் தலைமையிலான காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.

மேலும் அவர்களிடமிருந்து 16 சாக்கு மூட்டை களிலிருந்து ரூ. 1 லட்சத்து 37ஆயிரம் மதிப்புள்ள 140 கிலோ குட்கா மற்றும் குட்கா விற்பனை செய்த தொகை ரூ.4 லட்சம் மேலும் விற்பனைக்கு பயன்படுத்தபட்ட இரண்டு இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்து சிறையிலடைத்தனர் .

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 417

    0

    0